Parenting Tips : குழந்தைக்கு இன்னும் '1' வயசு ஆகலயா? அப்போ மறந்தும் இந்த '5' உணவுகளை கொடுக்காதீங்க

Published : Dec 29, 2025, 04:22 PM IST

ஒரு வயது கூட ஆகாத குழந்தைக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக் கூடாது என்பது குறித்து இங்கு காணலாம்.

PREV
18
Parenting Tips

புதிய பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தையை பராமரிப்பது சற்று சவாலாக தான் இருக்கும். அதிலும் தனியாக இருந்தால் இன்னும் சிரமமாக இருக்கும். உண்மையில், பிறந்த குழந்தையை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவை கொடுப்பது அவசியம். அதேசமயம் குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை திடஉணவுகளை தவிர்க்க வேண்டும். இதற்கு பல மருத்துவ காரணங்களை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். குழந்தை பிறந்து முதல் ஆறு மாதம் கழித்தே திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்த பதிவில் குழந்தை பிறந்து ஒரு வயதிற்குள் எந்தெந்த உணவுகளை கொடுக்கக் கூடாது என்ற சில தகவல்களை காணலாம்.

28
தேன் :

ஏராளமான மருத்துவ குணங்கள் இதில் உள்ளன. இருப்பினும் தேனில் குளாட்ரிடியம் போட்லினம் என்ற நச்சுத்தன்மை மிகுந்த பாக்டீரியா உள்ளது. இது குழந்தைகளை பலவீனமாக்கும் மற்றும் சோம்பலாக்கும். இதுதவிர மலச்சிக்கல், எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். எனவே, குழந்தைக்கு ஒரு வயது வரை தேன் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது.

38
முட்டை :

முட்டையின் வெள்ளை கருவில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அலர்ஜி ஏற்பட்டால் உடனே முட்டை கொடுப்பதை நிறுத்தி விடுங்கள்.

48
வேர்க்கடலை :

வேர்க்கடலையில் புரோட்டீன் போன்ற இதர ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. மேலும் வேர்க்கடலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். எனவே குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகாமல் வேர்க்கடலை கொடுக்காதீர்கள்.

58
மாட்டு பால் :

மாட்டு பாலில் இருக்கும் நொதி பொருள்கள் மற்றும் புரோட்டீன்கள் விரைவில் ஜீரணமாகாது. மேலும் இதில் இருக்கும் தாதுக்கள் குழந்தைகளின் சிறுநீரகங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஒரு வயது ஆகாத குழந்தைக்கு மாட்டுப்பால் கொடுக்க வேண்டாம்.

68
கடல் உணவுகள் :

கடல் உணவுகள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஒருவேளை குழந்தைகளுக்கு கடல் உணவு கொடுக்க நினைத்தால் ஒரு வயதிற்கு பிறகு கொடுக்கலாம். அதற்கு முன்னதாக எந்தவொரு கடல் உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

78
சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி மற்றும் சிட்ரஸ் அமில அதிகமாக உள்ளது. ஹ்ஒரு வயது கூட பிறக்காத குழந்தைக்கு சிட்ரஸ் பழங்களை கொடுத்தால் அது அவர்களுக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே ஒரு வயதிற்கு முன் குழந்தைகளுக்கு சிட்ரஸ் பழங்களை கொடுக்காதீர்கள்.

88
சர்க்கரை :

ஒருவயது ஆகும் வரை குழந்தைகளுக்கு சர்க்கரை ஒருபோதும் கொடுக்கவே கூடாது. மீறினால் அது பசியின்மையை ஏற்படுத்தும் மற்றும் டயட்டில் இடையூறு உண்டாக்கிவிடும். ஆகவே சர்க்கரையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதை தாமதமாக்குவது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories