
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ரொம்பவே கடுமையாக நடந்து கொள்வார்கள். இதனால் குழந்தைகளின் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் மட்டுமே ஏற்படும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அந்த வகையில் நீங்கள் ரொம்பவே கண்டிப்பான பெற்றோராக இருந்தால், அதனால் உங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கண்டிப்பான பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
படிப்பில் பின் தங்குவது
உங்கள் குழந்தை படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உங்கள் குழந்தைக்கு படிப்பின் அழுத்தத்தை கொடுத்தால் அந்த அழுத்தம் அவர்களுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா? இதனால் உங்கள் குழந்தையிடம் தோல்வியின் பயம், அவமானம், ஒப்பீட்டு பேசுவது, தண்டனை போன்ற எண்ணங்கள் ஏற்படும். இந்த மாதிரியான அழுத்தத்தால் உங்கள் குழந்தை படிப்பில் பின் தங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லப்போனால் படிப்பு மீது அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே ஏற்படும்.
அதிகளவு பயம் உணர்வு
நீங்கள் உங்கள் குழந்தையை ரொம்பவே கண்டித்தால் அதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சொல்லப்போனால் அவர்களிடம் எப்போதுமே தோல்வி பயம், பதற்றம், அச்சம் ஆகியவை இருக்கும். இதனால் அவர்கள் மனதளவில் ரொம்பவே பாதிப்படைவார்கள். ஏதாவது செய்தால் கூட தவறாகி விடுமோ என்ற பதற்றம் அவர்களிடம் எப்போதுமே இருக்கும்.
அதிகளவு மன அழுத்தம்
ரொம்பவே கண்டிப்பான பெற்றோர்களால் சில குழந்தைகள் அதிகளவு மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். நாள்பட்ட மன அழுத்தம் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும்.
முடிவெடுக்கும் திறன் இல்லாமல் போகும்
கண்டிப்பான பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எந்தவொரு விஷயத்திலும் முடிவு எடுக்க அனுமதிப்பதில்லை. இதனால் அந்தக் குழந்தைக்கு முடிவெடுக்கும் திறன் இல்லாமல் போகிறது. ஏதாவது ஒரு முக்கிய விஷயத்தில் முடிவெடுக்கும் போதும் கூட, பிரச்சனைகளை தீர்க்கும் போது கூட அதற்குரிய திறன் அந்த குழந்தைக்கு இல்லாததால், அது அவர்களது வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. எனவே குழந்தைகளை எப்பொழுதும் முடிவு எடுக்க அனுமதியுங்கள்.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. உங்க டீன் ஏஜ் மகனிடம் நெருக்கமாக பழக சூப்பர் டிப்ஸ் இதோ!!
தன்னம்பிக்கை குறையும்
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பிறரை வைத்து ஒப்பிட்டு பேசுவார்கள். இதனால் அந்த குழந்தையின் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். மேலும் அந்தக் குழந்தை வளர வளர தன் மீது இருக்கும் இழக்கும். இதனால் அவர்களது சமூக திறன் வளர்ச்சி பாதிக்கப்படும். இது தவிர இந்த குழந்தைக்கு நட்பு மற்றும் உறவுகளை வளர்ப்பது, பராமரிப்பது பற்றி தெரியாமல் போய்விடும்.
முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்
நீங்கள் உங்கள் குழந்தையிடம் ரொம்பவே கண்டிப்பாக நடந்துகொண்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாது. நாட்கள் ஆக ஆக அந்த குழந்தை முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள்.
படைப்பாற்றல் திறன் குறையும்
கண்டிப்பான பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் படைப்பாற்றல் திறன் குறையும். மேலும் குழந்தையின் பிரச்சினைகளை தீர்க்கும் திறன், பேச்சுத்திறன் மிகவும் குறையும்.
உறவுகள் பாதிக்கப்படும்
நீங்கள் கண்டிப்பான பெற்றோராக இருந்தால் பெற்றோர் குழந்தைக்கு இடையே உறவு பாதிக்கப்படும். அவர்களுக்கிடையேயான எப்போதுமே மனகசப்பு இருக்கும். நாள் ஆக ஆக அது வெறுப்பாக மாறி, இறுதியில் குழந்தை பெற்றோரிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளை 'இப்படி' கண்டித்தால் மோசமாக தான் வளர்வாங்க... இனிமேல் இதை சொல்லாதீங்க!!