
சிலருக்கு முக்கைச் சுற்றி வெள்ளைபுள்ளிகள் அதிகமாக இருக்கும். இது ஒயிட் ஹெட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கோ கரும்புள்ளிகள் இருக்கும். இது பிளாக் ஹெட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை அழகைக் கெடுப்பது மட்டுமின்றி, அந்த இடம் அதன் மென்மை தன்மையை இழப்பது மட்டுமின்றி, பார்ப்பதற்கு சற்று அசிங்கமாகவே இருக்கும்.
அவை வருவதற்கு முக்கிய காரணம் அந்த பகுதியை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது தான். மேலும் மூக்கைச் சுற்றியிருக்கும் கரும்புள்ளிகளை அகற்றுவது மிகவும் கடினம். ஏனெனில் அதை தோலுடன் மிக ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் உதவியுடன் அவற்றை சுலபமாக அகற்றி விடலாம். எனவே இந்த பதிவில் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வீட்டு குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க: தாடியை சவரம் செய்யும் போது மூக்கில் உள்ள முடிகளையும் வெட்டலாமா?
1. தேன் & எலுமிச்சை சாறு:
சிறிதளவு தேனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை உங்கள் முகத்தில் தடவி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு சூடான நீரில் முகத்தை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் மூக்கில் இருக்கும் கருப்பு புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
2. அரிசி மாவு & கற்றாழை ஜெல்:
மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து அந்த பேஸ்டை மூக்கில் தடவி நன்றாக காய வைக்கவும். பிறகு மெதுவாக அந்த பகுதியை தேய்த்து அகற்றுவோம். அரிசி மாவு சருமத்தை உரிக்கும். எனவே கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.
இதையும் படிங்க: மூக்குக்கும் உதடுக்கும் நடுவில் உள்ள பகுதியின் பெயர் என்ன தெரியுமா..?
3. தக்காளி:
தக்காளி மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. இதற்கு தக்காளியை பேஸ்ட் போலாக்கி அதை மூக்கில் தடவி நன்கு காய வைக்கவும். பிறகு சூடான நீரில் முகத்தை கழுவுங்கள் இதை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் நிங்கிவிடும்.
4. பாசிப்பயறு:
பாசிப்பயிறு மாவை தினமும் மூக்கில் தடவி வந்தால் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
5. பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து அதை மூக்கில் தடவி சுமார் 10 நிமிடம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். பேக்கிங் சோடா முக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றுவது மற்றும் இதே சருமத்தில் கூடுதல் எண்ணெய்யையும் அகற்ற உதவுகிறது. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
6. ஆரஞ்சு பழத்தோல் பொடி:
இதற்கு ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியில் சிறிதளவு பால் சேர்த்து அந்த பேஸ்ட்டை முகில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் அகற்றி விடும்.
7. மஞ்சள் மற்றும் வேப்பிலை:
இவை இரண்டிலும் நோய் எதிர்ப்பு அலர்ஜி பண்புகள் உள்ளன. எனவே இவை மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை சுலபமாக அகற்றிவிடும். இதற்கு வேப்பிலையை அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து சூடன் நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் நீங்கிவிடும்.