இந்தியாவின் விலை உயர்ந்த ஜெட் விமானத்தை வாங்கிய முகேஷ் அம்பானி! இத்தனை கோடியா?

First Published | Sep 19, 2024, 12:45 PM IST

இந்தியாவின் மிக விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானத்தை முகேஷ் அம்பானி வாங்கி உள்ளார். அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Mukesh Ambani

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் மிகப்பெரிய செல்வத்திற்காக பிரபலமானவராக அறியப்படுகிறார். அம்பானி வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அல்லது அம்பானிகள் வாங்கும் ஆடம்பர பொருட்கள் எப்போதும் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில். தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் ஈர்க்கக்கூடிய சேகரிப்பையும் முகேஷ் அம்பானி வைத்திருக்கிறார். 

அந்த வகையில் முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ஜெட் ஒன்றையும் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் முதல் போயிங் 737 MAX 9 ஐ அம்பானி வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதி நவீன நீண்ட தூர வணிக ஜெட் இப்போது மிகவும் விலையுயர்ந்த தனியார் விமானம் ஆகும்.

India's Most Expensive Private Jet

போயிங் 737 MAX 9, விரிவான மாற்றங்கள் மற்றும் விமான சோதனைகளைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியா வந்தது. முகேஷ் அம்பானியின் போயிங் 737 MAX 9, சுவிட்சர்லாந்தில் உள்ள EuroAirport Basel-Mulhouse-Freiburg (BSL) நிறுவனதில், கேபின் மாற்றங்கள் மற்றும் உட்புற மேம்பாடுகள் என பல மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போயிங் விமானம் ஏப்ரல் 13, 2023 முதல் சுவிட்சர்லாந்தில் இருந்ததாகவும் அங்கு அனைத்து அப்டேட்களும் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க தொடர்ச்சியான சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

Tap to resize

India's Most Expensive Private Jet

இந்தியா வருவதற்கு முன், தனியார் ஜெட் விமானம் பேசல், ஜெனிவா மற்றும் லண்டன் லூடன் விமான நிலையங்களில் ஆறு சோதனை ஓட்டங்களையும் மேற்கொண்டது. ஆகஸ்ட் 27, 2024 அன்று, போயிங் 737 மேக்ஸ் 9 தனது இறுதிப் பயணத்தை பாசலில் இருந்து டெல்லிக்கு நிறைவு செய்தது. இந்த விமானம் 9 மணி நேரத்தில் 6,234 கிலோமீட்டர்களைக் கடந்தது. இந்த போயிங் விமானத்தின் வருகையானது நாட்டின் மிகவும் பிரத்தியேகமான விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றாக மாற்றி உள்ளது.

தற்போது, அம்பானியின் புதிய விமானம் தற்போது டெல்லி விமான நிலையத்தில் சரக்கு முனையத்திற்கு அருகில் உள்ள பராமரிப்பு முனையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெட் விமானம் ரிலையன்ஸ் தலைமையகம் அமைந்துள்ள மும்பைக்கு ஜெட் விரைவில் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

India's Most Expensive Private Jet

போயிங் 737 மேக்ஸ் 9 உலகின் மிக விலையுயர்ந்த ஜெட் விமானங்களில் ஒன்றாகும், மேலும் இது இரண்டு CFMI LEAP-18 இன்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்த விமானம் MSN எண் 8401 மற்றும் ஒரே விமானத்தில் 6,355 கடல் மைல்கள் (11,770 கிலோமீட்டர்) பயணிக்கும் திறன் கொண்டது.

போயிங் 737 MAX 9 இன் அடிப்படை விலை $118.5 மில்லியன் ஆகும். எனினும் கேபின் ரெட்ரோஃபிட்டிங் மற்றும் உட்புற மாற்றங்களுக்கான செலவுகள் இதில் அடங்காது.. கூடுதலாக, போயிங் MAX 8 உடன் ஒப்பிடும் போது இந்த ஜெட் ஒரு பெரிய கேபின் மற்றும் சரக்கு இடத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த அதி நீண்ட தூர வணிக ஜெட் விமானத்திற்காக அம்பானி குடும்பம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mukesh Ambani

இந்த புதிய ஜெட் விமானத்தைத் தவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே ஒன்பது தனியார் ஜெட் விமானங்களைக் கொண்டுள்ளது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு Bombardier Global 6000, இரண்டு Dassault Falcon 900s மற்றும் Embraer ERJ-135 விமானங்களையும் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!