Mosquito Prevention Tips: மழை சீசன் தொடங்கியாச்சு.. வீட்டில் கொசு தொல்லை அதிகரிக்காமல் இருக்க இதை செய்யுங்க!

Published : Sep 20, 2026, 03:48 PM IST

Mosquito Prevention Tips: மழைக்காலத்தில் வீட்டில் கொசுக்கள் பெருகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தேங்கிய நீரை அகற்றுவது முதல் கொசுவலை பயன்படுத்துவது வரை முக்கிய தடுப்பு வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
மழை சீசன் தொடங்கியாச்சு

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே குளிர்ச்சியான வானிலை, மண் வாசனை என பலருக்கும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால் இதே மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும் தேங்கும் தண்ணீர், ஈரப்பதம் போன்ற காரணங்களால் கொசுக்கள் பெருகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. குறிப்பாக வீட்டு பால்கனி, மொட்டைமாடி, தோட்டம், கழிவுநீர் கால்வாய், பயன்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் போன்ற இடங்களில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் கொசுக்கள் முட்டையிட வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், மக்கள் கொசு கடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம்.

எனவே, மழைக்காலத்தில் கொசுக்களை விரட்டுவதைக் காட்டிலும், அவை பெருகும் இடங்களை உருவாகாமல் தடுப்பது முக்கியம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தினசரி கடைப்பிடிப்பதன் மூலம் கொசு தொல்லையைக் கணிசமாகக் குறைக்கலாம்.

25
வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்க விடாதீர்கள்

மழை பெய்த பிறகு வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக,

  • பழைய டயர்கள்
  • தேங்காய் ஓடுகள்
  • உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள்
  • பூந்தொட்டி மற்றும் அதன் கீழ் வைக்கும் தட்டுகள்
  • வாளி, டப்பா போன்ற பயன்படுத்தாத பாத்திரங்கள்
  • மொட்டைமாடியில் உள்ள பொருட்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மழைநீர் செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, வீட்டைச் சுற்றியுள்ள வடிகால் பகுதிகளில் அடைப்பு இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றி மழைநீர் சீராக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.

35
வீட்டின் ஜன்னல், கதவுகளில் கொசுவலை பயன்படுத்தலாம்

மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜன்னல், கதவுகள் வழியாக கொசுக்கள் வீட்டுக்குள் வராமல் இருக்க கொசுவலை (mesh) பொருத்தலாம். ஏற்கனவே இருக்கும் கொசுவலையி ஓட்டை அல்லது கிழிவு ஏற்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

குடிநீர் பாத்திரங்களை மூடி வையுங்கள்

வீட்டில் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டி, குடம், வாளி உள்ளிட்டவற்றை மூடி வைத்திருப்பது முக்கியம். திறந்த நிலையில் நீண்ட நேரம் தண்ணீர் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர் சேமித்ட்து வைக்கும் பாத்திரங்களை அவ்வப்போது காலி செய்து சுத்தம் செய்வதும் நல்லது.

45
பிளாஸ்டிக் மழைநீரைத் தேக்கி வைக்கும்

பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள், டப்பாக்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் மழைநீரைத் தேக்கி வைக்கும். எனவே அவற்றை முறையாக அகற்றி, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், குளியலறை, சமையலறை, வாஷிங் மெஷின் அருகில் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் அல்லது கசிவு ஏற்படும் பகுதிகளில் ஈரம் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். குழாய், தொட்டி உள்ளிட்டவற்றில் கசிவு இருந்தால் உடனடியாக சரிசெய்வது நல்லது.

55
கொசு விரட்டிகளை பயன்படுத்தும்போது கவனம்

கொசு விரட்டி திரவங்கள், மின்சார கொசு விரட்டிகள், கொசுவர்த்தி போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, அவற்றின் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருக்கும் வீடுகளில், அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து கூடுதல் கவனத்துடன் பயன்படுத்துவது அவசியம். கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தும்போது போதிய காற்றோட்டம் இருப்பதையும், தீப்பற்றக்கூடிய பொருட்களிலிருந்து தூரமாக வைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

முக்கியமாக: டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கு தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி, வீட்டைச் சுற்றிலும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை கண்டறிந்து அகற்றுவதும் மிகவும் முக்கியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories