சீனாவின் சின்சுவா புரோவின்ஸ், பகுதியை சேர்ந்தவர் 33 வயதான சென்லி, கடந்த 20 ஆண்டுகளாக மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 13 வயதில் பருவத்தை அடைந்த சென்லி கடந்த 20 ஆண்டுகளாக, சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்.
எனினும், குடும்பத்தின் சூழ்நிலை கருதி மருத்துவமனையில் சிகிக்சை மேற்கொள்ளாமல் இருந்துள்ளார். பின்னர், தொடர் வேதனையை அனுபவித்த அவர் அண்மையில் சிறுநீரக நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்றார். அப்போது மருத்துவமனையில் அவருக்கு சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பரிசோதனையில், அவருக்கு சினைப்பை (பெண் பிறப்புறுப்பு) உள்ளிட்ட பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பதுவும், பெண் தன்மைக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருந்ததும். இதனால் அடிவயிற்றில் வலியும் இருந்தும். மேலும், இதனை அவர் சிறுநீரக பிரச்சனை என்று தவறாக புரிந்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் வாழ்ந்துள்ளார் என்பதும் தெரிய வநந்தது. இதையடுத்து, அவரின் சினைப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் இனி அவருக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படாது என்றும், உலகில் 0. 05% -1.7% மட்டுமே இந்த நிலை (intersex) ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.