மேலும் அன்றாட உணவு முறைகளோடு தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சியையும் பெண்கள் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். ஆம், பிசிஓஎஸ்-ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடைப்பயிற்சி சிறந்த வழியாகும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடை சரியாக பராமரிக்க முடியும்.
உணவில் மாற்றம்: இந்த பிரச்சனையால் அவதிப்படுவோர் சத்தான உணவுகளைக் குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. உங்கள் உணவில் இஞ்சி, கிராம்பு, குங்குமப்பூ, பெருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றைக் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோன்று, ஐஸ்கிரீம், பழச்சாறுகள், சோடா போன்ற அதிக கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்