Kidneys - Health Foods: சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வாகும் 5 சூப்பரான உணவுகள்! மறக்காம எடுத்துக்கோங்க..

Published : Jul 10, 2022, 06:02 AM IST

Kidneys - Health Foods: மனித உடலில் சிறுநீரகங்கள் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். 

PREV
16
Kidneys - Health Foods: சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வாகும் 5 சூப்பரான உணவுகள்! மறக்காம எடுத்துக்கோங்க..
Kidneys - Health Foods:

சிறுநீரகங்கள் மிக முக்கியமான நோக்கம், இரத்தத்தில் இருந்து அசுத்தங்களை வடிகட்டுவதே ஆகும். அதுமட்டுமின்று, அவை உடலில் உள்ள கனிம அளவை பராமரிப்பது போன்ற பிற செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன. அப்படியாக, சிறுநீரகத்தின் சரியான செயல்பாட்டில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது, பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக நோய்களை உருவாக்கி மோசமாக்கும்.  எனவே, சிறுநீரக கோளாறுகளை இயற்கையாகவே தடுக்க உதவும் சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 மேலும் படிக்க....Healthy Drinks: கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்...5 சிறந்த ஜூஸ்...இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்..?
 

26
Kidneys - Health Foods:

 ஸ்ட்ராபெர்ரி:

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளன, இது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.  அதேசமயம் இது சிறுநீரக நோயாளிகளுக்கும் சிறந்தது, இது சிறுநீரக நோய்களை இயற்கையாகவே தடுக்க உதவுகிறது. 

 

36
Kidneys - Health Foods:

முட்டைகோஸ்

முட்டைகோஸ் சிறுநீரக இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  முட்டைக்கோஸில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் குறைவாக இருப்பதால், சிறுநீரக நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக அமைகிறது. எனவே முட்டைகோஸ் உங்கள் டயட்டில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம்.

 மேலும் படிக்க....Healthy Drinks: கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்...5 சிறந்த ஜூஸ்...இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்..?

 

46
Kidneys - Health Foods:

முளைகட்டிய பயிர்கள்:

 இந்த முளைக்கட்டிய பயிர்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சிறுநீரகத்தில் கற்கள் வராமலும் தடுக்கலாம். எனவே, முளைக்கட்டிய பச்சைப் பயிர்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது.

56
Kidneys - Health Foods:

குடைமிளகாய்:

குடைமிளகாயில் பொட்டாசியம் குறைவாக உள்ளது, இது மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது சிறுநீரக நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது. இதிலுள்ள வைட்டமின் சி  ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை மாற்ற உதவுகிறது. 

 மேலும் படிக்க....Healthy Drinks: கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்...5 சிறந்த ஜூஸ்...இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்..?
 

66
Kidneys - Health Foods:

காளான்கள்:

காளான்களில் வைட்டமின் பி, தாமிரம், மாங்கனீசு மற்றும் செலினியம் ஆகியவை நிரம்பியிருப்பதால் சிறுநீரகங்களுக்கு சிறப்பாக வேலை செய்கிறது.  அதுமட்டுமின்றி இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து சிறுநீரக நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்மபடுத்த உதவுகிறது.
 

Read more Photos on
click me!

Recommended Stories