நம் கண்ணை ஏமாற்றும் பாணியிலான காட்சி அமைப்புகளை ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) என்பார்கள். இந்த பாணியை பயன்படுத்தி கனடாவைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் மிமி சோய் ஓவியங்களை தீட்டி வருகிறார்.
மிமி சோய் (Mimi Choi) தனது உடலை ஓவியங்களை வரையும் கேன்வாஸாகப் பயன்படுத்தி வரையும் ஓவியங்கள் காண்போரை ஈர்க்கிறது. இவரது ஓவியங்கள் ஒளியியல் மாயைகளை கொண்டது.
சமீபத்தில் அவர் வெளியிட்ட ஓவியங்கள் மிரட்டலாக இருந்தன. கண்கள், உதடுகள், காதுகள், மூக்குகள், விரல்கள் என அனைத்து பாகங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதில், ‘சரியான ஜோடி கண்களைக் கண்டுபிடிக்க முடியுமா?’ எனக் கேள்வியை கூட அவர் எழுப்பியிருந்தார். ஆனால், சுலபத்தில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தன்னுடைய கால் பல துண்டுகளாக வெட்டப்பட்டதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் ஓவியத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
வாழைப்பழங்கள் உரிப்பது, ரொட்டிகளை வெட்டுவது, ஆப்பிள் துண்டுகளை நறுக்குவது மாதிரியான ஓவியங்களை கூட அவர் வெளியிட்டுள்ளார். இவை மிகவும் தத்ரூபமாக மிரள வைக்கும் வகையில் உள்ளன.