Madurai : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா.. கோலாகலமாக தொடங்கியது.!!

First Published Apr 6, 2022, 7:25 AM IST

Madurai : உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இடையே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது.

மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் சிவாச்சாரியார்கள், வேத விற்பனர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.

மிதுன லக்கனத்தில் கம்பத்தடி மண்டபத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புல் வைத்து வெண்பட்டுவால் சுற்றி பிரமாண்டமான மாலையால் கொடி  ஏற்றப்பட்டது.  

click me!