மனைவியிடம் சொல்ல கூடாதவை ..! உஷார் திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும்..!

First Published Mar 13, 2022, 8:17 PM IST

திருமண வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமான உறவு. இதனை சிதையவிடாமால் எப்படி கவனமாக பார்த்து கொள்ளவேண்டும், என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்..

கணவர் - மனைவி என இருவருமே, ஒருவரை ஒருவர் நோகடிக்கும் வகையில் உணர்வு பூர்வமான விஷயங்களில் விளையாட கூடாது. இது மன ரீதியாக உங்களுடைய துணையை அதிகம் பாதிக்கும்.

சண்டைகள் போடாமல் யாருடைய இல்லற வாழ்க்கையும் இனித்திடாது. அப்படி உங்களுக்குள் வரும் பிரச்சனையின் போது, உங்களுடைய துணை. சமாதானமாக பேச வரும் போது, அவர்களை அவமதிப்பது போல், உன்வேலையை பாரு, நீ சும்மா இரு, போன்ற எரிச்சலூட்டும் வார்த்தைகளை பேசாதீர்கள். குறிப்பாக மனைவிகளிடம் இது போன்ற வார்த்தைகளை பேசாமல் இருப்பது சிறந்தது.

கணவன் மார்களே இது உங்களுக்குதான், உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால், அது பற்றி கண்டிப்பாக மனைவியிடம் அமர்ந்து பேசி ஆலோசித்து விசேஷம் பற்றி திட்டமிடுங்கள். அப்படி நீங்கள் செய்ய தவறும் பட்சத்தில், உங்கள் மனைவி வெறுமையாக உணர்வார்.

கணவன் - மனைவி பிரச்சனை வந்தால், தயவு செய்து விவாகரத்து என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். இது தான் பல வாழ்க்கையை கோர்ட் வரை கொண்டு செல்கிறது. மாறாக, கணவனோ அல்லது மனைவியோ அமைதியாக இருந்து பின்னர் உங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை கணவனிடமோ , மனைவியிடமோ சொல்லுங்கள். கோவத்தில் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அமைதியான நிலையில் உங்களை கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.

உங்கள் மனைவியை அடுத்தவரோடு ஒப்பிட்டு பேசுவது தவறு. மனைவி செய்வதில் ஏதாவது தவறு இருக்கிறது என நினைத்தால் அதனை, அவரிடம் நீங்களே கூறி சரிசெய்து கொள்ள சொல்லுங்கள். குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் மனைவியை ஒருபோதும் விட்டு கொடுத்து பேசாதீர்கள்.

கணவன் - மனைவி பிரச்சனை எப்போது நான்கு சுவர்களுக்குள் தான் இருக்க வேண்டும். எப்போது சுவரை விட்டு வீட்டு பிரச்சனை வெளியே செல்கிறதோ அப்போது தான் உண்மையான பிரச்சனையே துவங்கும். எனவே கணவருக்கும் சண்டை இருந்தால் கூட மனைவி அதனை தோழிகளிடம் கூட பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இது போன்ற ஒரு சில எளிமையான விஷயங்களை பின்பற்றினாலேயே உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்

click me!