Mari selvaraj new home: அழகான வீட்டில் குடும்பத்துடன் குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்! வைரல் புகைப்படம்.!

Anija Kannan   | Asianet News
Published : Feb 24, 2022, 11:45 AM ISTUpdated : Feb 24, 2022, 11:50 AM IST

Mari Selvaraj new home: ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது அம்பத்தூர் அருகே உள்ள தனது புதிய வீட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

PREV
17
Mari selvaraj new home: அழகான வீட்டில் குடும்பத்துடன் குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்! வைரல் புகைப்படம்.!

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது அம்பத்தூர் அருகே உள்ள தனது புதிய வீட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

27

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பாராட்டப்பட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் புது வீடு கட்டி குடும்பத்தோடு குடியேறினார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

37

இவர் இயக்குநர் ராம் இயக்கிய 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி' உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

47

இயக்குனர் மாரி செல்வராஜ் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. 

57

மாரி செல்வராஜையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அனைத்து தரப்பிலும் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றன.
 

67

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், சென்னை அம்பத்தூரில் புது வீடு கட்டி’ தனது குடும்பத்தினருடன் அங்கு குடியேறியுள்ளார். மாரிசெல்வராஜ்ஜின் குருநாதர் இயக்குனர் ராம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.   

77

நடிகர் மற்றும் அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின், இயக்குனரின் புதிய இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்குகிறார்.

click me!

Recommended Stories