Health: உஷார்... அடிக்கடி கை கழுவினால் கூட ஆபத்தா? மறக்காமல் தெரிந்து கொள்ளுங்கள்..

First Published Dec 5, 2021, 7:55 PM IST

பொதுவாக அடிக்கடி கை கழுவும் பழக்கம் பலருக்கு இருந்து வருகிறது. அதே நேரம் கடந்த 2 வருடங்களாக, மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பிரச்சனைக்கு தீர்வு சுகாதாரமாக இருப்பது என கூறப்பட்டதால், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

பாதுகாப்பாக இருக்கிறோம் என அடிக்கடி சானிடைஸர் மற்றும் சோப்பு போட்டு கைகளை கழுவி கொண்டே இருப்பதாலும் சில ஆபத்துகள் வர கூடும் என்பதை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

இப்படி அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால், வறட்சி, அரிப்பு மற்றும் தோல் பிரச்சனைகள் வரக்கூடும் என்பதையும், அதனை தவிர்ப்பதற்கு என்ன வழிகள் உள்ளது என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.

எதையும் ஓரளவுக்கு தான் நாம் பயன்படுத்த வேண்டும், அடிக்கடி சோப்பு மற்றும் சானிடைசர் உபயோகித்து கைகளை சுத்தம் செய்தவதால், தோல் வறட்சி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தோல் தடித்து போவதுடன் சருமத்தின் உள்ள லிப்பிடுகள் சேதமாகும், குறிப்பாக சோப்பில் இருக்கும் சில ரசாயனங்கள் நம் மென்மையான தோல் மீது கடுமையாக செயல்பட்டு சருமத்தின் இயற்கை ஈரப்பதத்தை இழக்க செய்துவிடுகிறதாம்.

குறிப்பாக அடோபிக் டெர்மடிடிஸ், சொரியாசிஸ், எக்ஸிமா கண்டிஷன்களால் பாதிக்கப்பட்டவர்கள் சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவுவதால் அவர்களுடைய தோல் அதிகம் பாதிக்கப்படும்.

தவிர்க்கமுடியாத காரணத்தால் கை அடிக்கடி கழுவ வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் கைகளை கழுவிய பின்னர், மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

ஒருவர் லைட் வெயிட் மாய்ஸ்ட்ரைஸிங் க்ரீமை பயன்படுத்தும் போது, அது அவர்களது சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது. அதே போல் தூங்குவதற்கு முன் கைகளை கழுவி விட்டு உடனடியாக டீப் மாய்ஸ்ட்ரைஸிங் லோஷனைப் பயன்படுத்துவது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை உங்களுக்கு அளிக்கும் .

சிலருக்கு கைகள் சோப்பு போட்டு கழுவியவுடன், தோல் எரிச்சல் உண்டாவது போல் தெரிந்தால் உடனடியாக நீங்கள் உங்கள் கைகளை மெல்லிய துணியை கொண்டு கையை துடைத்து விடுங்கள்.

அலர்ஜி பாதிப்புகளை தவிர்க்க உங்களது தோல் மருத்துவரை அணுகி... உங்களுடைய தோள்களுக்கு ஏற்றாப்போல் அவர்கள் தரும் கிரீம்களை பயன்படுத்துவது சிறந்தது.

சுகாதாரமாக இருக்க கை கழுவுவது அவசியமானது என்றாலும், இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

click me!