Headache: அடிக்கடி தலைவலியால் அவதி படுறீங்களா..? இந்த இயற்கையான முறையை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க!

First Published Nov 29, 2021, 10:50 PM IST

தலை வலை வந்தால், எந்த ஒரு வேலையும் புரியாமல் நம்மை அலைக்கழித்துவிடும். இதற்க்கு தீர்வாக மாத்திரைகள் உட்கொண்டால் அது, உங்களுக்கு சில சைடு எபெக்ட் உண்டாக்க வாய்ப்புள்ளது. இப்படி பட்ட சமயத்தில் வீட்டில் இருக்கும் இயற்க்கை பொருட்களை வைத்தே... எப்படி தலைவலியை சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இஞ்சி:

தலைவலிக்கு மிகசிறந்த கை வைத்தியத்தில் ஒன்று இஞ்சி. இது தலையில் உள்ள இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, எனவே வலி கட்டுக்குள் வரும். மேலும் செரிமான பிரச்சனை காரணமாக உங்களுக்கு தலை வலி வந்திருந்தால், இது செரிமானத்தை தூண்டுகிறது.  மேலும் ஒற்றைத் தலைவலியின் போது ஏற்படும் குமட்டலைத் தணிக்கவும் இஞ்சி உதவுகிறது. தலைவலிக்கான வீட்டு மருந்தாக இந்த அதிசய மூலப்பொருளை எப்படி பயன்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா?

இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு சம பாகங்கள் கலந்து டீ போன்று சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உட்கொள்ளலாம். விரைவான நிவாரணம் பெற, இஞ்சிப் பொடியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து  உங்கள் நெற்றியில் சில நிமிடங்கள் தடவலாம்.

புதினா எண்ணெய்:

இதன் புத்துணர்ச்சியூட்டும் வாசனை, தலைவலியை ஏற்படுத்தும் அடைபட்ட இரத்த நாளங்களைத் திறக்க உதவுகிறது. இதில் உள்ள புதினா, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. குளிர்ந்த, இதமான  நறுமணத்தை அமைதியாக சுவாசிக்க உதவும்.

நீங்கள் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயில் 3 துளிகள் புதினா  எண்ணெயைக் கலக்கலாம் அல்லது சிறிது தண்ணீர் சேர்த்து உங்கள் கழுத்தின் பின்புறம் மசாஜ் செய்யலாம். உங்கள் நெற்றியில் சில புதினா இலைகளை மசித்து பூசலாம். ஒரு கப் கொதிக்கும் நீரில் 1 தேக்கரண்டி உலர்ந்த புதினா சேர்த்து மூலிகை தேநீர் போல் தயார் செய்து அருந்துவது மூலமும் உங்கள் தலை வலி குறையும்.

லாவெண்டர் எண்ணெய்:

லாவெண்டர் எண்ணெய் ஒரு அற்புதமான நறுமணத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் - தலைவலியைப் போக்க இது ஒரு சிறந்த தீர்வாகும். உங்கள் கைகளில் சில துளி லாவெண்டர் எண்ணையை விட்டு நன்கு உள்ளிழுப்பதால் வலி சற்று குறையும். இரண்டு கப் கொதிக்கும் நீரில் 2 சொட்டு லாவெண்டர் எண்ணெயைச் சேர்த்து வேது பிடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் இதனுடன் சேர்த்து,  உங்கள் நெற்றியில் மசாஜ் செய்யவும். வெந்நீரில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் ஊற்றி குளிப்பதாலும், முகத்தை கழுவுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டை பொதுவாகவே அனைவருடைய வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள்,  இது சிறந்த தலைவலி நிவாரணிகளில் என்பது உங்களுக்கு தெரிவியுமா?  அதை எப்படி பயன்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? சில இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கி . அதை உங்கள் நெற்றியில் மற்றும் கழுத்தில்  தடவி 30 நிமிடங்கள் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். இது உங்களை தலை வலியில் இருந்து மீட்டு புத்துணர்ச்சியடைய வைக்கும்.

அடிப்படை நீட்சிகள்:

உங்கள் தலை மற்றும் கழுத்தை நீட்டி சில  எளிய பயிற்சிகள் செய்வதாலும் தலைவலியின் தீவிரம் குறைந்து நீங்கள் புத்துணர்வாக உணர்வீர்கள்.  உங்கள் கன்னத்தை மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி, இடது மற்றும் வலதுபுறமாக நகர்த்தி, ஒவ்வொரு தோள்பட்டை நோக்கியும் உங்கள் கழுத்தை பக்கவாட்டில் வளைக்கவும். தோள்பட்டை மற்றும் கழுத்து தசைகள் ஓய்வெடுக்க உதவும் வகையில், கழுத்தை கடிகார திசையிலும் எதிரெதிர் திசையிலும் மெதுவாக சுழற்ற முயற்சி செய்யலாம். இது உங்களுக்குள் அழுத்தம் இருந்தால் குறைத்து தலை வலியை குணப்படுத்தும்.

click me!