அனைத்து காலநிலை மாற்றங்களும், மாசுபாடும் நமது முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. நம் தலைமுடி வலுவாக இருக்க சரியான ஊட்டச்சத்து தேவை. மாசுபாட்டைத் தவிர, முடி சேதம் மற்றும் முடி உதிர்வை பாதிக்கும் 4 காரணிகள் என்ன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
அதிக எடை இளைக்க விரும்புகிறீர்களா? அப்படி திடீர் என, நீங்கள் டயட் போன்றவற்றை கடைபிடித்து வந்தால் அது உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்த காரணமாக அமையலாம்.
சரியான சாப்பாட்டு முறையை பின்பற்றாமல் இருந்தால் அதுவும் உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும். சீரான மற்றும் ஆரோக்கியமான உணவைப் பராமரிக்க வேண்டும். அதிக ஜங்க் ஃபுட் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.
குறைந்த கலோரி அல்லது புரதம் குறைபாடு ஏற்படுவதாலும் முடி உதிர்வு ஏற்படும். நம்முடைய அன்றாட உணவில் சரியான அளவு கலோரி மற்றும் புரதம் இருக்க வேண்டும். இவை குறையும் பட்சத்தில் அது உங்கள் தோல் மற்றும் முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் தலைமுடிக்கு புரதம் மிகவும் முக்கியமானது. இது கெரட்டினால் ஆனது, அதற்கு பயோட்டின் என்ற அமினோ அமிலம் தேவைப்படுகிறது. புரதம் குறையும் பட்சத்திலும் முடி உதிர்வு ஏற்படும்.
அதே போல் துத்தநாகம், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தும். உங்கள் உடலுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் தேவை, உங்கள் உடலில் துத்தநாகம், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து இல்லாவிட்டால், அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அதன் பாதிப்பு உங்களின் முடியில் தான் முதலில் பிரதிபலிக்கும்.