உங்கள் சருமத்தை பளீச் என பட்டு போல் மின்ன வைக்கும் 5 இயற்க்கை உணவுகள்! மறக்காம தெரிந்து கொள்ளுங்கள்!

First Published | Nov 24, 2021, 8:51 PM IST

அனைவருக்குமே எப்போதும் தங்களுடைய சருமம் பளீச் என பளபளப்பாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இப்படி பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் ஐந்து உணவு இயற்க்கை உணவுகள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

உணவு இல்லாமல் யாராலும் வாழ முடியாது... நம்மில் பலருக்கு விதவிதமான உணவுகளை சாப்பிடுவதில் அலாதி பிரியம் இருந்தாலும், அந்த உணவுகள் நம் உடல் நலத்தையும் காக்கும் என்றால், கண்டிப்பாக அதற்க்கு நீங்கள் முக்கியத்தும் கொடுக்கலாம். அப்படிப்பட்ட 5 இயற்க்கை உணவுகள் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் பார்க்கலாம் வாங்க...

யாராலும் எளிதில் வாங்கி உன்ன கூடிய ஒரு பழம் தான் ஆரஞ்சு. இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, எனவே இதை சாப்பிடுவதாலும், கொஞ்சம் சார் எடுத்து முகத்தில் தடவுவதால்,  உங்கள் சருமம் பளீச் என மின்னுவதை நீங்களே பார்க்கலாம். . ஃபேஸ் பேக்குகளில் ஆரஞ்சு சாறு பயன்படுத்தினால், அது பளீச் சருமத்தை தருவதோடு, உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

Tap to resize

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம் நிறைந்துள்ளது. மேலும் இது இறந்த சரும செல்களை நீக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரி கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இது சருமதியில் தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. நீங்கள் ஸ்ட்ராபெரி பழத்தை சிறிது மசித்து, அதனுடன் தேன் சேர்த்து, முகத்தில் பூசலாம் உங்கள் முகம் ஜொலிக்க துவங்கும்.

பூசணிக்காய்

பூசணிக்காயில் வைட்டமின் ஏ, விட்டம் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. பூசணிக்காயின் தோல் கூட ஒளிரும் சருமத்தை நீங்கள் பெற உதவும். இது துத்தநாகத்தைக் கொண்டுள்ளது மற்றும் புதிய சரும செல்கள் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிகிறது. மேலும் முகத்தில் எண்ணெய் வழிவதையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

ட்ரூட்

பீட்ரூட் சருமத்தைப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கிய இயற்க்கை உணவாகும். தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், அது உங்கள் சருமத்திற்கு அதிசயத்தை உண்டு பண்ணும். இது இரத்தத்தை உள்ளிருந்து சுத்திகரித்து, நச்சுக்களை சுத்தப்படுத்தி, உங்கள் முகத்தில் பிரகாசிக்க உதவுகிறது.

தக்காளி

தக்காளியில் வைட்டமின் ஏ, கே, பி1, பி3, பி5, பி6, பி7 மற்றும் வைட்டமின் சி உள்ளன. தக்காளி உங்களது முகத்தில் வயதான தோற்றம் தென்பட்டால் அதை நீக்கும் வல்லமை கொண்டது. தினமும் சில துளி தக்காளி சாற்றை முகத்தில் தடவினால் தங்கம் போல் முகம் ஜொலிப்பதை ஒரே வாரத்தில் நீங்கள் பார்க்கலாம்.

Latest Videos

click me!