இது நவம்பர் நான்காவது வாரம் (நவம்பர் 22 முதல் 28 வரை). இந்த வாரம் சர்வார்த்தசித்தி என்ற யோகம் மூன்று முறை உருவாகும். அமிர்த சித்தி என்ற மற்றொரு மங்கள யோகம் இரண்டு முறை உருவாகும். கிரகங்களின் நிலை காரணமாக இந்த வாரம் பல சுப, அசுப யோகங்கள் உருவாகும். அவற்றின் முதல் 6 ராசிகளின் பலன்கள் நேற்று நாம் பார்த்த நிலையில், மீதமுள்ள 6 ராசிகள் எப்படி இருக்க போகிறது என்பதை பார்ப்போம்.
துலாம்
வாரத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய வணிக ரீதியான ஒப்பந்தங்களில் நீங்கள் கையெழுத்து போட நேரிடலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் இழுபறியாக இருந்திருந்தால் இந்த வாரம் அவை தீரும் வாய்க்குகள் அதிகம். எல்லா விஷயங்களிலும் சற்று கூடுதல் கவனமும் தேவை... இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். காதல் உறவுகள் பலப்படும். வார இறுதியில் நீண்ட அல்லது குறுகிய தூர பயணம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்
காதல் உறவுகளில் கவனமாக தேவை. காதல் உறவுகளுக்குள் பிரச்சனை வந்தால் அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது. அதே போல் குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் வந்தால் மற்றவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள். இந்த வாரம் நீங்கள் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான எந்த பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், சிந்தித்து செயல்படுங்கள்.
தனுசு
பணியில் மூத்த மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கொடுக்க முற்படுவீர்கள். நண்பர்களிடம் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்க கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள்
மகரம்
காதல் உறவுகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் போது, உங்கள் உறவினர்களின் உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். கோபம் அல்லது அவசரத்தில் முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். அவசரம் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. திருமணம் ஆனவர்களுக்கு குடும்பத்தினர் பக்க பலமாக இருப்பார்கள். குடும்பம் சம்மந்தமான முடிவுகள் எடுக்கும் போது சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்காததால் மனம் சற்று வருத்தம் ஏற்பட கூடும். எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கவும்.
கும்பம்
வியாபாரத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உண்டு. அப்போது நலம் விரும்பிகளின் கருத்தைப் பெற மறக்காதீர்கள். உங்கள் திட்டங்களை செயல்படுத்தும் முன் அதனை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. எதிரிகளால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. நீதிமன்றம் தொடர்பான விவகாரங்கள் தீர்க்கப்படும். காதல் உறவில் மூன்றாவது நபரின் நுழைவு அல்லது குறுக்கீடு காரணமாக சில பிரச்சனைகள் வந்து போகலாம்.
மீனம்
நண்பர் அல்லது செல்வாக்கு மிக்க நபரின் உதவியால், நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும். கடந்த வாரத்தை விட வியாபாரத்தில் அதிக லாபமும் வளர்ச்சியும் இருக்கும். காதல் உறவுகளில் இருந்து வந்த தவறான புரிதல்கள் நீங்கும். பரஸ்பர நம்பிக்கையும் அன்பும் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை உண்டாகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க வாய்ப்புகள் அமையும். இந்த வாரம் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.