Guru Peyarchi 2022 Palangal: குருவின் ராசி மாற்றத்தால் குறிப்பிட்ட ராசிகளுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
ஜோதிடத்தின் பார்வையில், குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தனது ராசியை மாற்றுகிறது. அதன்படி தற்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில், அதாவது பிற்போக்கு நிலையில் உள்ளார். இவர் வருகிற நவம்பர் 23 வரை அவர் இந்த ராசியில் இப்படியே சஞ்சரிப்பார். இதன் விளைவு மனித வாழ்க்கையில் சுபமாகவும், அசுபமாகவும் கருதப்படுகிறது. இருப்பினும் 3 ராசிகளுக்கு இந்த வக்ர நிலை, அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வியாழன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பன்மடங்கு மகிழ்ச்சியைத் தரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் விரிவடையும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். இந்த வக்ர நிலை காலத்தில் உங்களுக்கு புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் பயணம் செல்லலாம்.
34
Guru Peyarchi 2022 Palangal:
கடகம்:
வியாழன் கிரகத்தின் வக்ர நிலை கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் பல தடைபட்ட வேலைகளை முடிக்க முடியும். நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் நிவாரணம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் உறுதியாக இருப்பீர்கள்.தொழில் சம்பந்தமாக நீண்ட பயணங்கள் ஏற்படலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பல புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்களும் நடக்கலாம். மேலும், உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய அதிகரிப்பு ஏற்படலாம். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.