Published : Sep 15, 2022, 12:52 PM ISTUpdated : Sep 15, 2022, 03:17 PM IST
Tharpanam in Tamil: மகன் இல்லாத வீட்டில், இறந்தவரின் மனைவி அல்லது மகள் தர்ப்பணம் செய்யலாமா..? என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.
நமக்கு நன்கு தெரிந்த முன்னோரின் நினைவாகச் செய்யப்படுவதே தருப்பணம். தருப்பணம் ஏதோ இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்கு அல்ல, இறந்தவர்களை நன்றியுடன் நினைவு கூறும் முறை. இதை தினம்தோறும் செய்யலாம். அது ஒரு புண்ணிய காரியம். அதாவது சூரியன், வருணன், அக்கினி எல்லா தேவர்களும் நீர்நிலைகளில் நின்று தண்ணீரை இரண்டு உள்ளங்கைகளிலும் எடுத்துக்கொண்டு, ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தேவர்களுக்கு நீரை சமர்ப்பணம் செய்து அதன்மூலம் ஆசீர்வாதத்தை பெறுவது.
அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இறந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டிய தினம் ‘அம்மாவாசை, இறந்தவர்களின் திதி அன்று’ இந்த இரண்டு தினங்கள் மட்டுமே. அதையும் கட்டாயமாக ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். இதைதான் தர்பணம் என்று சொல்லுவார்கள்.
இறந்தவர்களின் மகன் இந்த தர்ப்பணம் செய்யலாம். ஆனால் சில சாஸ்திரங்களில் பெண்களுக்கு தர்ப்பணம் செய்யும் உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. மகன் இல்லாத போது, இறந்தவரின் மனைவிக்கு சகோதரனுக்கு முன்பாக தர்ப்பணம் செய்ய உரிமை உண்டு. தவிர, இந்து மதத்தின் படி, இறந்த நபருடன் தொடர்புடைய எந்த நபரும் தர்ப்பணம் செய்யலாம்.
45
tharpanam
ராமாயணத்தில் தசரதன் இறந்தபோது, ராமன் இல்லாத நேரத்தில் சீதை அவனுடைய பிண்டனை செய்தாள். பல சாஸ்திரங்களின்படி, பெண்கள் எள்ளும் தண்ணீரும் இரைந்து தர்ப்பணம் செய்யக்கூடாது என்று எந்த வேதமும் இல்லை. ஷ்ரத்தாவைப் போலவே, இறந்தவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. மகாபாரதத்திலும் பெண்கள் தர்ப்பணம் செய்வதைக் காணலாம். இறந்தவர் திருமணமாகாதவராக இருந்தாலும், அவரது தாயும் சகோதரியும் கூட தர்ப்பணம் செய்யலாம்.
55
tharpanam
இறந்தவர்களது ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், தர்ப்பணத்தை முறையாக செய்யப்படுவதே உத்தமம். இந்த நாளில் கறுப்பு எள், அரிசி உருண்டை செய்து முன்னோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. இந்த வழக்கில் காகம் யமனின் தூதராக கருதப்படுகிறது. காகம் அந்த உணவை சாப்பிட்டால், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. ஒருவேளை, இந்த சாஸ்திரங்களை முறையாக கடைபிடிக்காமல் விட்டால்தான் பித்ரு தோஷமும், பித்ரு சாபம் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.