Published : Sep 15, 2022, 03:15 PM ISTUpdated : Sep 16, 2022, 04:58 PM IST
Bathroom freshener at home in Tamil: நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டின் கழிவறைகளை துர்நாற்றம் வீசாமல், சுத்தமாக வைத்து கொள்ள தேவையான உதவு குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் குளியலறை, கழிவறை போன்றவை வசத்திற்காக வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறது. இதனால், பாத்ரூமில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தால் வீடு முழுவதும் அதன் நாற்றம் இருக்கும். இன்னும், சில வீடுகளில் சமையல் அறை பக்கத்திலேயே பாத்ரூம் இருக்கிறது. இது இன்னும் சிக்கல். எனவே, அன்றாடம் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், சுகாதாரம் என்பது கேள்வி குறியாக மாறிவிடும்..
நாம் அப்படி குளியலறை, கழிவறைகளை வாசமாக வைத்து கொள்வதற்கு விதவிதமான விலை உயர்ந்த 'ரூம் பிரஸ்னர்' வாசனை திரவியங்கள் வாங்கி மாட்டினாலும், ஒரு சில மணி நேரம் சென்றதும் அவற்றின் வாசனை நீங்கி வீட்டில் மீண்டும் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும். அத்துடன், பல்லி, கரப்பான், கொசு போன்றவையும் வந்து தொல்லை கொடுக்கும்.
எனவே, இனிமேல் இது போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, உங்கள் பணத்தை வீணாக்காமல், எந்த செலவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்தே உங்களின் கழிவறைகளை வசமாகவும், சுத்தமாகவும் வைத்து கொள்ளலாம். அதற்கு தேவையான உதவி குறிப்புகளை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.
முதலில் அதற்கு ஒரு காலியான டப்பாவை எடுத்து, ஆப்ப சோடா 2 டீஸ்புன், உங்கள் முகத்திற்கு போடும் பவுடர் 2 டீஸ்புன், கம்ஃபோர்ட் 1 டீஸ்புன் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன், உங்கள் வீட்டில் இருக்கும் எதாவது ஒரு கம் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள்.
அதை கட்லட் போல் தட்டி ஒரு தட்டில் வைத்து வெயிலில் ஒரு நாள் காய வைத்து விடுங்கள். சோப்பு கட்டி மாறி நமக்கு ஒரு கட்டி கிடைத்திருக்கும். இதே போல இரண்டு மூன்று கூட தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
57
Bathroom freshener at home in Tamil:
பிறகு இதனை ஏதேனும் காலியான துணி பைகளை சதுர வடிவில் வெட்டி, அதில் நீங்கள் தயார் செய்த சோப்புக்கட்டியை வைத்து ஒரு நூல் போட்டு கட்டி ஏதாவது ஒரு ஆணியல் பாத்ரூமில் தொங்க விட்டு விடுங்கள். இதிலிருந்து வெளிவரும் நறுமணம் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும். இது அவ்வளவு சீக்கிரத்தில் வாசனையை இழக்காது. கரைந்தும் போகாது.
இதேபோல இரண்டு மூன்று தயார் செய்து கூட வாஷ்பேஷனுக்கு பக்கத்தில் கழிவறையில், குளியலறையில் தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு வாசனை எங்கெல்லாம் வேண்டுமோ..? அங்கெல்லாம் வைத்து கொள்ளலாம்.
67
Bathroom freshener at home in Tamil:
அதேபோன்று, உங்கள் பாத்ரூமை சுத்தமாக வைத்து கொள்ள ஒரு மூடி டெட்டால், 1 மூடி ஷாம்பு ஊற்றி நன்றாக கலந்து, டாய்லட்டை கழுவி விட்டால் போதும், பாத்ரூம் துர்நாற்றமே வீசாது. மேலும், நோய் கிருமிகள் நம்மை நெருங்கவே நெருங்காது எல்லா இடங்களிலும் நறுமணம் வீசும்.
77
Bathroom freshener at home in Tamil:
முடிந்தவரை நாம் நம்முடைய மற்ற வீடுகளில் அறைகளை காட்டிலும், பாத்ரூமை வாரத்தில் இரண்டு நாட்களாவது ஏதாவது ஒரு லிக்விட் போட்டு கழுவ வேண்டும். அப்போது தான் நோய் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து, ஆரோக்கியமாக வாழ முடியும். நிச்சயமாக உங்களின் பணமும் மிச்சமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.