Love Horoscope 2022 palangal: ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்கார பெண்கள் தங்கள் காதலுக்காக எதையும், தியாகம் செய்யும் அளவிற்கு இருப்பார்களாம். யார் இந்த ராசிக்கார பெண்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காதல் என்ற மூன்றெழுத்து மந்திரம் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால், காதல் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒளிந்து இருக்கும். காதல் செய்யாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிலருக்கு படிப்பின் மேலே காதல் இருக்கும். சிலருக்கும் அம்மாவின் மேலே அளவு கடந்த அன்பும், காதலும் இருக்கும்.
27
Astrology _love
ஆண்களும், பெண்களும் காதலிக்கும் போது சில சூழ்நிலைகளில், தன்னுடைய காதலுக்காக உயிர் தியாக செய்யும் நிலைக்கு கூட செல்கிறது. இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரிய வரும், போது பெற்றோர் ஏற்கவில்லை என்றால், காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் உயிர் தியாகம் செய்யும் அளவிற்கு கூட செல்கின்றனர். இவை சில சமயம் ராசிகளை வைத்தும் கணிக்கப்படுகிறது.
37
Astrology _love
அப்படியாக, ஜோதிட சாஸ்திரத்தின் படி காதலுக்கு மிகவும் உண்மையாக இருக்கும் சிலர் உயிர் தியாகம் செய்யவும் துணிவார்கள். அப்படியாக, எந்தெந்த ராசி கொண்ட பெண்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
47
love_astrology
மிதுனம்:
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மிதுன ராசிப் பெண்கள் காதல் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருப்பார்கள். இந்த ராசி கொண்ட பெண்கள், யாருடன் ஒருமுறை காதல் வயப்பட்டு விட்டால், அவர்கள் அதற்காக எந்த விஷயத்தையும் செய்ய துணிவார்கள். அவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
தனது காதல் வாழ்க்கையில் காதலை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்.
57
Astrology- love
சிம்மம்:
சிம்ம ராசி பெண்கள் அதிக காதல் உணர்வு குணம் கொண்டவர்கள். சிம்ம ராசி பெண்கள் காதல் விஷயத்தில், தங்கள் துணையிடம் மனம் விட்டு பேசுவார்கள். அவர்கள் தங்கள் துணையுடன் மட்டுமே தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். பிறரிடம் சொல்ல விரும்பாதவர்கள். காதலுக்காக, எந்த விதமான பிரச்சனையை சந்திக்கவும் தயாராகி விடுகிறார்கள்.
67
Love _astrology
மகரம்:
மகர ராசி பெண்கள் தங்கள் துணையின் விருப்பு வெறுப்பு பகிர்ந்து கொள்வார்கள். அவர்களின் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பார்கள். காதலை உயிர்பிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். இந்த ராசி கொண்ட பெண்கள் காதலியாகவோ, மனைவியாகவோ இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். ஆனால், இந்த ராசி கொண்ட பெண்கள் உங்களை தவிர வேறு யாரையும் ஏற்க மாட்டார்கள்.
77
Sagittarius
தனுசு:
காதலுக்காக எந்த விதமான பிரச்சனையை சந்திக்கவும் தயாராகி விடுகிறார்கள். தனுஷ் ராசிக்காரர்கள் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். தனுசு ராசி பெண்ணை காதலிக்கும் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இந்த பெண்கள் தங்கள் துணையின் உணர்வுகளை மதித்து, அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். காதலனுக்காக எந்த பிரச்சனைகளையும் தாங்கிக் கொள்வார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.