கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் பலரும் குடும்பத்துடன் வெளியூர் பயணத்துக்கு திட்டமிட்டு இருக்கலாம். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்தியாவில் சிறந்த பஸ் டிக்கெட் புக்கிங் செயலிகள் மற்றும் அவற்றின் ஆபர்கள் குறித்து விரிவாக காணலாம்.
ரெட் பஸ் (Red Bus)
ரெட் பஸ் இந்தியாவின் நம்பர் 1 பஸ் டிக்கெட் முன்பதிவு செயலியாகும். இந்தியாவின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் மற்ற இடத்துக்கு செல்ல ரெட் பஸ் வாயிலாக டிக்கெட் புக் செய்து கொள்ள முடியும். குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, இருக்கை வசதி என நமக்கு தேவையான பேருந்துகளில் பயணிக்க புக் செய்ய முடியும். மொபைலில் பிளே ஸ்டோர் மூலம் ரெட் பஸ் செயலியை டவுன்ட்லோட் செய்து செல்போன் எண்ணை பயன்படுத்தி எளிதாக டிக்கெட் புக் செய்யலாம்.
முதன்முறை ரெட் பஸ் செயலில் நீங்கள் டிக்கெட் புக் செய்தால் கட்டணத்தில் 10% வரை தள்ளுபடி கிடைக்கும். ரூ.150 வரை உங்களால் சேமிக்க முடியும். ரூ.100 கேஷ்பேக் சலுகையும் உண்டு. ரெட் பஸ் செயலில் பயண தேதியை மாற்றி அமைக்கும் வசதியும் உள்ளது.