Published : Dec 24, 2024, 11:16 AM ISTUpdated : Dec 24, 2024, 11:20 AM IST
Teenage Parenting Tips : ஒவ்வொரு பெற்றோரும் தங்களது டீனேஜ் பிள்ளைக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான காரியம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்வதற்கு தங்களது வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கிறார்கள். குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் முக்கிய பங்கு ஆகும். அதுவும் குறிப்பாக பிள்ளைகள் டீனேஜ் வந்த பிறகு பெற்றோரின் பொறுப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்.
25
Teenage Parenting Tips In Tamil
ஆம், இந்த வயது தான் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பருவம் ஆகும். ஏனெனில், இந்த பருவத்தில் தான் அவர்களின் ஆளுமை உருவாகும் மற்றும் அவர்கள் நிறைய கற்றுக் கொள்வார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு சரியான விஷயங்களை கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் டீனேஜ் பிள்ளைகள் நல்ல மனிதராக வளர அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
டீனேஜ் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்:
1. நேர்மை :
எப்போதுமே நேர்மையாக இருப்பது மற்றும் உண்மையை சொல்லுவது மிகவும் முக்கியம். எனவே பெற்றோர்கள் தங்கள் டீனேஜ் குழந்தைகளுக்கு நேர்மையை கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் இது பிறர் மீது நம்பிக்கையையும் மரியாதையையும் உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தும்.
2. மரியாதை :
வயது மூத்தவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும் என்று உங்கள் டீனேஜ் குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். மேலும் நண்பர்களையும் மதிக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் ஒரு நல்ல உறவுகள் மரியாதையுடன் கட்டமைக்கப்படுகின்றது.
45
Life skills for teens in tamil
3. தன்னம்பிக்கை :
குழந்தைகளை தன்னம்பிக்கையாக வளர்க்க வேண்டும். அதாவது குழந்தைகள் தங்கள் அறையை சுத்தம் செய்தால் தங்களது சொந்த வேலைகளை அவர்களே செய்வது இது போன்ற பல விஷயங்களை அவர்கள் செய்ய கற்றுக் கொடுங்கள் இது அவர்களை பொறுப்புள்ளவராகும்.
4. நேரத்தின் முக்கியத்துவம் :
நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதே உங்கள் டீனேஜ் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள். ஏனெனில், நேரத்தின் மதிப்பு பற்றி குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம். மேலும் நேரத்தை எவ்வாறு சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். இதனால் அவர்கள் தங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க கற்றுக் கொள்வார்கள்.
55
Essential life skills for teens in tamil
5. கருணை :
உங்கள் டீனேஜ் குழந்தைக்கு பிறரிடம் அன்பாக இருக்க கற்றுக்கொடுங்கள். மேலும் பிறருக்கு உதவும் குணத்தையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். உங்கள் குழந்தையை இப்படி கருமையுடன் வளர்க்கும் போது அவர்கள் சமுதாயத்தில் நல்ல மனிதராக வளருவார்கள்.