
நெய் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாக கருதப்படுகிறது. அதாவது இதில் நம் உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள், நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமில அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால்தான் நம்முடைய முன்னோர்கள் நெய்யை உணவில் சேர்த்துக்கொண்டார்கள். ஆயுர்வேதத்திலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் இது உதவுகிறது. மேலும் இது உங்களது இருதய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.
இத்தகைய சூழ்நிலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் குறிப்பாக செரிமான அமைப்பு சுத்தப்படுத்தப்படும், மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கும், வயதான எதிர்ப்பு குறையும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும், கண் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தவிர மூளை, நினைவாற்றல் போன்றவற்றிற்கும் நெய் நன்மை பயக்கும். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, நெய் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அனைவருக்கும் நல்லதல்ல. ஆம், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் அது நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். அது யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: நெய் நல்லது தான்; ஆனா 'இப்படி' சாப்பிட்டா பிரச்சினை வருவது கன்ஃபார்ம்!
யாரெல்லாம் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடக்கூடாது:
பால் அலர்ஜி உள்ளவர்கள்...
சிலருக்கு பால் மற்றும் பால் பொருட்கள் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டாம். மீறி சாப்பிட்டால் அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதய பிரச்சனை உள்ளவர்கள்...
காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும் போது அதில் இருக்கும் கொலஸ்ட்ராலானது இதய நோய் ஆபத்துகளை அதிகரிக்க செய்யும். அதுவும் குறிப்பாக, நெய்யில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு அமிலங்களானது இதய குழாய்களில் கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். எனவே, இதய பிரச்சினை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டாம்.
கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள்...
உங்களுக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தால் நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பிரச்சனை வீரியமாகும்.
அதிக எடை உள்ளவர்கள்...
அதிகமாக இருக்கும் உங்களது எடையை குறைக்க நீங்கள் டயட்டில் இருக்கும்போது காலையில் வெறும் வயிற்றில் கண்டிப்பாக நெய் எடுத்துக் கொள்ள வேண்டாம். வேண்டுமானால் நீங்கள் உணவுடன் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவு மட்டும் நெய் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்தால் உங்களது எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய்.. தினமும் சாப்பிட்டால் இந்த '6' நோய்கள் கிட்ட கூட நெருங்காது!!
கர்ப்பிணிகள்...
கர்ப்ப காலத்தில் பெண்கள் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டாம். ஏனெனில் பொதுவாக கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை அஜீரணக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பு ஏற்படும். நெய் எடுத்துக் கொண்டால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
வயிற்று பிரச்சனை உள்ளவர்கள்..
நெய் செரிமான அமைப்புக்கு நல்லது என்றாலும் நீங்கள் அடிக்கடி செரிமான மற்றும் வயிற்று பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டாம்.