
ஒவ்வொரு பெண்ணுக்கும் 30 வயது ஒரு முக்கியமான கட்டமாகும். ஏனெனில், இந்த வயதில் தான் தோலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். அதற்கு சிறப்பு கவனம் செலுத்தவில்லை என்றால், தோல் சுருக்கம், வறட்சி, கோடுகள் தெரிய ஆரம்பிக்கும். இதுதவிர சருமம் ஈரத்தை இழந்து விடும். மேலும் சீக்கிரமே முதிர்ச்சி அடைவீர்கள்.
முக்கியமாக இந்த 30 வயதில்தான் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, தோல் பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றுவது மற்றும் நல்ல தூக்கத்தை பெறுவது இவை அனைத்தும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே 30 வயது அடைந்த ஒவ்வொரு பெண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சரும பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றினால் சருமம் எப்போதும் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: பெண்களே!! திருமணத்திற்கு முன் இந்த '5' விஷயங்கள் பண்ணா போதும்.. ஒரே மாதத்தில் ஒல்லியா, அழகா மாறிடுவீங்க!!
30 வயது அடைந்தவர்களுக்கான சரும பராமரிப்பு குறிப்புகள்:
பால் : பால் சருமத்தை பளபளப்பாகவும் தெளிவாகவும் மாற்ற பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பால் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பருத்தி உருண்டை உதவியுடன் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சருமம் ஆழமாக சுத்தப்படுத்தப்படும் மற்றும் மென்மையாகவும் மாறும்.
அரிசி மாவு : இதற்கு அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி ஃபேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்திற்கு இயற்கையான பொலிவை தரும்.
தேன் : தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்ரைசர் என்பதால் இதை நீங்கள் உங்கள் முகத்திற்கு நேரடியாக தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்களது முகத்தின் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
தயிர் : தயிரில் இருக்கும் லாட்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கும். எனவே தயிர் உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் உங்களது சரும மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும் முக்கியமாக தயிர் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும்.
இதையும் படிங்க: கண்ணாடி போல 'சருமம்' பளபளக்கனுமா? இந்த உணவுகள் போதும்.. டாக்டர் சிவராமன் சூப்பர் டிப்ஸ்!!
எலுமிச்சை சாறு : எலுமிச்சை இயற்கையினை ப்ளீச் ஆகும். எனவே ஒரு கிண்ணத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் கறைகள் மறையும், முகம் சுத்தமாகும் மற்றும் மென்மையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
குறிப்பு : மேலே சொன்ன சரும பராமரிப்பு குறிப்புகளை தவிர ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.