நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக நாம் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்திருக்க அவசியமான ஒன்று. தூக்கத்தில் தான் நம் உடல் சக்தி பெறுகிறது. நல்ல தூக்கம் புத்துணர்வை தருகிறது. ஆனால் நாம் தூங்கும் தோரணை (Posture) நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இடது பக்கம் தூங்குவது தான் பல ஆரோக்கிய நன்மைகளை தருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
செரிமானத்தை மேம்படும்
இடது பக்கம் தூங்குவதால், நம் உடல் கழிவுகள் குடல்கள் வழியாக எளிதாகச் செல்லும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் உங்கள் இடது பக்கத்தில் தூங்கும்போது உங்கள் வயிறு மற்றும் கணையத்தின் நிலை நன்றாக இருக்கும். இது அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
குறட்டை குறையும்..!
நீங்கள் அல்லது உங்கள் துணை குறட்டை விட்டு தூக்கத்தை நாசம் செய்தால், இடது பக்கத்தில் தூங்க முயற்சி செய்யுங்கள். இந்த நிலையில் தான் சுவாசப்பாதைகள் தெளிவாக இருக்கும். இது குறட்டையை பெருமளவு குறைக்கிறது.
இதய ஆரோக்கியம் மேம்படும்
இடது பக்கம் தூங்குவது இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கும். இதயத்திற்கு இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.ஏனென்றால் நமது இதயம் கூட இடது பக்கம் தான் இருக்கிறது. இடது பக்கம் தூங்கினால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இதனால் இதய நோய் அபாயம் கூட குறையும்.
முதுகு வலி நிவாரணம்
முதுகு வலியால் அவஸ்தையா? இடது பக்கமாக படுத்து தூங்குங்கள். இப்படி இடது பக்கம் தூங்கினால் முதுகு வலி கொஞ்சம் குறைந்துவிடும். இடது பக்கம் பார்த்து படுப்பதால் முதுகில் அழுத்தம் குறைகிறது.