வீட்டுச் சுவர்களில் ஏற்படும் ஈரப்பதம் (Dampness) என்பது ஒரு சாதாரண பிரச்சனை போலத் தெரிந்தாலும், அதை கவனிக்காமல் விட்டால் வீட்டின் உறுதித்தன்மைக்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் வேட்டு வைத்துவிடும். அது மட்டுமல்ல பெயிண்ட் அடிக்கடி உரிந்து வருவது, அழுக்கு படிவது என பல பிரச்சனைகள் இருக்கும். குறிப்பாக பாத்ரூம், படிக்கட்டு, கிச்சன், லிவிங் உள்ளிட்ட இடங்களில் ஈரப்பதம் காரணமாக சுவர்கள் சீக்கிரம் பழாகிவிடும். இதற்கு பெயிண்ட் மட்டும் அடிப்பது ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது. இப்போதெல்லாம் மக்கள் வீட்டின் அழகை அதிகரிக்கவும், சுவர்களை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கவும் டிரெண்டியான வால் டைல்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டைல்ஸ் சுவர்களுக்கு மாடர்ன் லுக் கொடுப்பதோடு, ஈரப்பதத்தில் இருந்தும் சுவர்களைப் பாதுகாக்கிறது. படிக்கட்டு, பாத்ரூம், லிவிங் ரூம் முதல் பெட்ரூம் வரை வீட்டுக்கு ஒரு கிளாசி மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும் பல டைல் டிசைன்கள் இப்போது கிடைக்கின்றன.