Iron Rich Foods : குழந்தைக்கு கீரை சாப்பிட பிடிக்காதா? இந்த '5' உணவுகளில் கீரையை மிஞ்சும் இரும்புச்சத்து இருக்கு!!

Published : Aug 29, 2025, 03:40 PM IST

கீரையை மிஞ்சும் அளவுக்கு இரும்புச்சத்து காணப்படும் 5 சைவ உணவுகளை இங்கு காணலாம்.

PREV
16
High Iron Vegetarian Foods

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கீரை சாப்பிட பிடிக்காது. கீரை என்றாலே முகம் சுளிப்பார்கள். ஆனால் கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியமான சத்துக்கள் உள்ளன. கீரையில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை செய்யக்கூடியது. இரத்தத்தின் சிவப்பு அணுக்களில் ஒரு பகுதியாக இரும்புச்சத்து இருக்கிறது. இது கர்ப்பிணிகளுக்கும் அத்தியாவசியமாக தேவை. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் இரத்த சோகை ஏற்படும். சோர்வு, பலவீனம் போன்றவை வரக்கூடும். இரும்புச்சத்து குறைவாக எடுத்துக் கொள்ளும் பல பெண்களுக்கும் மாதவிடாய் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க இரும்புச்சத்து உள்ள உணவுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் கீரையை விரும்பமாட்டார்கள். இந்தப் பதிவில் கீரையை சாப்பிடாவிட்டாலும் மற்ற எந்த உணவில் இருந்து இரும்புச்சத்தை பெற முடியும் என காணலாம்.

26
கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை இரும்புச்சத்து கொண்ட சிறந்த உணவு. ஒரு கப் கடலையில் கீரையை விட அதிகமாக இரும்புச்சத்து உள்ளது. இது தவிர நார்ச்சத்து, புரதம், ஃபோலேட் போன்றவை உள்ளன.

36
பூசணி விதைகள்

பூசணி விதைகளை உண்பது சூப்பரான ஸ்நாக்ஸ். இதில் இரும்புச்சத்து உள்ளது. வெறும் 28-கிராம் பூசணி விதைகளில் 2.5 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இந்த விதைகளில் வைட்டமின் K, துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம் ஆகியவையும் உள்ளன. இந்த விதைகளை உண்பதால் இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு நோய், மனச்சோர்வு ஆகியவை குறைகிறது.

46
ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் இரும்புச்சத்து மட்டுமல்ல; பல்வேறு சத்துக்கள் உள்ளன. ஒரு கப் ப்ரோக்கோலியில் 112% வைட்டமின் சி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதை உண்பதால் உடலில் இரும்புச்சத்து சிறப்பாக உறிஞ்சப்படுகிறது.

56
குயினோவா

இந்த தானியம் இரும்புச்சத்து கொண்டது. இதில் பசையம் கிடையாது. குயினோவாவில் மற்ற தானியங்களை விடவும் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. ஃபோலேட், மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் பிற தானியங்களை விடவும் அதிகமான ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு இருக்கிறது. இவை செல்களை ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதத்திலிருந்து பாதுகாக்கும்.

66
எள் விதைகள்

இவை சிறியவையாக இருந்தாலும் ஊட்டச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. கீரையை காட்டிலும் அதிக இரும்புச்சத்து கொண்டது. எள் விதைகள் கால்சியம், நல்ல கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள் ஆகியவை கொண்ட சத்துள்ள உணவு. எள் புண்ணாக்கு, மிட்டாய், துவையல் என பல வழிகளில் உண்ணலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories