தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதும் என்பது கட்டுக்கதை.. எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

First Published | Jun 7, 2023, 9:02 PM IST

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

மனித உடலின் எடையில் 60% க்கும் அதிகமாக தண்ணீர் தான் உள்ளது. இது மூளை மற்றும் இதயத்தில் 73%, நுரையீரலில் 83%, தோலில் 64%, தசைகள் மற்றும் சிறுநீரகங்களில் 79% மற்றும் எலும்பில் 31% தண்ணீர் உள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு கூறுகிறது. 

நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தண்ணீர் தேவை, அது நமது உடலின் வெப்பநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. உடல் பெரும்பாலும் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம், பகலில் தண்ணீரை இழக்கிறது, ஆனால், நீரிழப்பைத் தவிர்க்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

Tap to resize

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இது வெறும் கட்டுக்கதை என்று உலகளாவிய நீரிழிவு சமூகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அபெர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆராய்ச்சியாளர்கள் 23 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,600 பேரின் தினசரி 2 லிட்டர் நீர் நுகர்வை மதிப்பீடு செய்தனர். அவர்களின் பதில்களை பகுப்பாய்வு செய்த பிறகு, 2 லிட்டர் அல்லது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதில் தனித்துவமான முக்கியத்துவம் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் தாகமாக இல்லாவிட்டாலும், நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் எனினும், தனிப்பட்ட விருப்பமாகும்.. பல உள் மற்றும் வெளிப்புற காரணிகள் இறுதியில் உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை தீர்மானிக்கின்றன.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களைப் போலவே வெப்பமான மற்றும் ஈரப்பதமான இடங்களில் வசிப்பவர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடலில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி ஆற்றல் உற்பத்தி வடிவில் பயன்படுத்தப்படுவதால், 20 முதல் 35 வயது வரையிலான பெரியவர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த வயதினருக்கு ஒரு நாளைக்கு 4.2 லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம். வயதானவுடன் தண்ணீர் நுகர்வு குறைகிறது. 20 முதல் 40 வயதுடைய பெண்களின் பரிந்துரைக்கப்பட்ட நீர் நுகர்வு ஒரு நாளைக்கு 3.3 லிட்டர் என கண்டறியப்பட்டுள்ளது.

Latest Videos

click me!