ஜூன் 21 உலகம் அழிய போகிறதா? மாயன் காலெண்டர் கணிப்பிற்கு நாசா விஞ்ஞானிகள் கருத்து!

First Published Jun 16, 2020, 4:11 PM IST

உலக நாடுகள், தற்போது கொரோனா அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், மாயன் காலண்டரில் ஜூன் 21 ஆம் தேதியுடன் உலகம் அழிய உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

தற்போது மக்களின் பயன்பாட்டில் உள்ள, கிரொகோரியன் காலெண்டருக்கு முன், அதாவது 1752 ஆம் ஆண்டுகளுக்கு முன், மாயன் காலெண்டர் மற்றும் ஜூலியன் காலெண்டர்கள் தான் பயன்பாட்டில் இருந்தது.
undefined
ஜூலியன் காலண்டர் படி, கிரெகோரியன் காலண்டரில் இருந்து ஒரு வருடத்திற்கு 11 நாட்கள் குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பார்த்தல் இந்த உலகம் இருப்பது 2020 அல்ல 2012 ஆம் ஆண்டு என கூறப்படுகிறது.
undefined
எனவே மாயன் காலண்டரில், உலகம் அழிவதாக கூறப்பட்ட தேதி தற்போதைய காலண்டரில் உள்ள ஜூன் 21 ஆம் தேதி என்று சமூக வலைத்தளத்தில் பலர் இந்த தகவலை பரப்பி வருகிறார்கள்.
undefined
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள நாசா விஞ்ஞானிகள் ஏற்கனவே நிபிரு என்கிற கிரகம் தாக்கி பூமி அழிந்து விடும் என 2003 ஆம் ஆண்டு கூறப்பட்டது ஆனால் அதுபோல் எதுவும் நடக்க வில்லை.
undefined
2012 ஆம் ஆண்டு மாயன் காலண்டரில் இடம்பெற்றது போல் உலகம் அழியும் என கூறப்பட்டது அதுவும் நடக்க வில்லை. இவை அனைத்தும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் உலா வரும் தகவல்கள் எனவும் இதனால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
undefined
click me!