பூண்டு முளைப்பது ஏன்?
பூண்டு முளைப்பது இயற்கையானது என்றாலும், சில காரணங்களும் உள்ளன. அவை:
- முதலில் பூண்டை நீண்ட நாள் பயன்படுத்தாமல் அப்படியே இருந்தால் அது முளைக்க ஆரம்பிக்கும் ஏனெனில் சமையலறையில் வெப்பம் சூடாக இருப்பதால் அந்த வெப்பத்தில் அது துளிர்க்க ஆரம்பிக்கும்.
- அதுபோல ஈரப்பதம் காரணமாகவும் பூண்டு முளைக்கும். ஏனெனில் பூண்டு ஈரப்பதத்தை உறிஞ்சும் இதன் விளைவாக பூண்டு முளைக்கும்.
எனவே, பூண்டு முளைப்பதை தடுக்க நீங்கள் அதை ஈரப்பஇல்லாத, குளிர்ந்த இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் வைத்து சேமிக்கலாம்.