குளிர்காலத்தில் பிரிட்ஜில் வைத்த காய்கறி சீக்கிரமே அழுகி போகுதா? 'இந்த' டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

Published : Dec 10, 2024, 11:05 AM ISTUpdated : Dec 10, 2024, 11:11 AM IST

Winter Vegetable Storage Tips : குளிர்காலத்தில் நீங்கள் வாங்கும் காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க அதை சேமிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
குளிர்காலத்தில் பிரிட்ஜில் வைத்த காய்கறி சீக்கிரமே அழுகி போகுதா? 'இந்த' டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
Vegetable Storage Tips In Tamil

இப்போதெல்லாம் பரபரப்பான வாழ்க்கை காரணமாக நாம் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறோம். இதனால் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் வாங்கி வைக்கிறோம். இதற்கு பணவீக்கமும் ஒரு காரணம்.  

அதுமட்டுமின்றி, சந்தையில் காய்கறியின் விலை அவ்வப்போது உயர்ந்து வருவதால் மலிவான விலையில் விற்பனையாகும்போதே அவற்றை அளவுக்கு அதிகமாக வாங்கிவிடுகிறோம். ஆனால் காய்கறிகளை சரியான முறையில் சேமிக்காவிட்டால் அவை சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும். 

25
Best ways to store vegetables in winter in tamil

அதுமட்டுமின்றி காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்டுப் போகாது என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் சில சமயங்களில் காய்கறிகளை இரண்டு மூன்று நாட்களுக்கு பயன்படுத்தாமல் பிரிட்ஜில் அப்படியே வைத்தால், அது கெட்டுப் போக ஆரம்பிக்கும். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் மோசமாகும். இதனால் பணம் அனைத்தும் வீணானது தான் மிச்சம். இத்தகைய சூழ்நிலையில் குளிர்காலத்தில் நீங்கள் வாங்கும் காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றை முறையாக சேமிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: வேலை ஈஸினு குக்கரில் இந்த '5' உணவுகளை  சமைக்குறீங்களா? இந்த தவறை பண்ணாதீங்க!!

35
How to keep vegetables fresh in winter in tamil

காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க சேமிப்பது எப்படி?

குளிர்ந்த நீர்:

ஃப்ரிட்ஜில் சில காய்கறிகளை வைப்பதற்கு பதிலாக குளிர்ந்த நீரில் வைத்து சேமிக்கலாம். அதாவது கேரட், கீரை, உருளைக்கிழங்கு, வெள்ளரி போன்ற காய்கறிகளை குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால் பிரஷாகவே இருக்கும். ஆனால் தண்ணீரை நீங்கள் ஒவ்வொரு இரண்டு நாளுக்கும் மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

45
Freezer storage for vegetables in tamil

வினிகர்:

ஃப்ரிட்ஜில் காய்கறிகளை வைத்து கெட்டுப் போவதற்கு பதிலாக வினிகர் பயன்படுத்தி கெட்டுப்போவதை சுலபமாக தடுக்கலாம். இதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு வினிகர் சேர்த்து கலக்கவும்.பிறகு பழங்கள் மற்றும் காய்கறிகளை இதில் போட்டு சுமார் 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு அவற்றை நன்கு காய வைத்து பின் பிரிட்ஜில் வைக்க வேண்டும். இப்படி செய்தால் அவை நீண்ட நாள் பிரஷ் ஆகவே இருக்கும்.

இதையும் படிங்க:   உருளைக்கிழங்கு வேக வைக்குறப்ப குக்கர் கருப்பாகுதா? தடுக்க டிப்ஸ்!

55
Winter vegetable handling and preparation tips in tamil

டிஷ்யூ பேப்பர்:

குளிர்காலத்தில் கீரை போன்ற பச்சை காய்கறிகள் அதிகமாக கிடைக்கும். மேலும் அது நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்காது. ஒருவேளை உங்களது வீட்டில் பச்சை காய்கறிகளை நீங்கள் அதிகம் வாங்கி இருந்தால் டிஷ்யூ பேப்பர், காட்டன் துணி அல்லது செய்தித்தாள் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பச்சை காய்கறிகளை சேமிக்கலாம். ஏனெனில் இவை காய்கறிகளின் ஈரப்பதத்தை உறிஞ்சி நீண்ட நாள் பிரஷ்ஷாக வைத்திருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories