
நம்மில் பெரும்பாலானோருக்கு குளிக்கும் போது சிறிநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. இது இயற்கையான செயல். ஆனால் இந்த பழக்கம் சில நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது என்று சொன்னால் உங்களால் நம்ம முடிகிறதா? மேலும் இந்த பழக்கத்தை சுகாதாரமற்றது என்று கூட நாம் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல செயல் என்று கூட ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். அது எப்படி என்று யோசிக்கிறீர்களா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
உண்மையை சொல்ல வேண்டுமானால், நம்முடைய உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரை சுகாதாரமற்றது என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல. நம்முடைய சிறுநீர் சுத்தமானது என்று ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். ஏனெனில் இதில் குறைந்த அளவில் மட்டுமே பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே குளிக்கும் போது சிறுநீர் கழித்தால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள். இன்னும் சொல்லப் போனால் காலில் காயங்கள் இருந்தால் கூட சிறுநீர் அதில் பட்டால் தொற்றுகள் ஏதும் ஏற்படாது.
உங்களுக்கு தெரியுமா.. மனிதனின் சிறுநீரானது சொரியாசிஸ் சரும பிரச்சனைகளை ரொம்பவே நல்லது ஏனெனில் அதில் இயற்கையாகவே
எலெக்ட்ரோலைட்ஸ் மற்றும் யூரியா உள்ளன. யூரியா காஸ்மெட்டிக் பொருட்கள் மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றது. எனவே குளிக்கும் போது சிறுநீர் கழித்தால் அதுகுறித்து வருத்தப்பட வேண்டாம். அது உங்களது சருமத்திற்கு நல்லது தான்.
இதையும் படிங்க: மிஸ் பண்ணாதீங்க!! தண்ணீரில் வேப்பிலை போட்டு குளித்தால் இத்தனை நன்மைகள் இருக்கு!!
அதுபோல மனிதனின் சிறுநீரை ஆன்ட்டிசெப்டிக் மருந்து என்று கூட சொல்லலாம். ஏனெனில் குளிக்கும்போது சிறுநீர் உங்களது பாதத்தில் படும்போது அது பூஞ்சை தொற்றை போக்கும் எனவே குளிக்கும் போது சிறுநீர் போவது ஆபத்து என்று பயப்பட வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதையும் படிங்க: குளிப்பதற்கு முன் இந்த '1' விஷயம் மட்டும் பண்ணுங்க; நோய்கள் விலகி ஓடும்!
மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதால் தண்ணீரை மிச்சமாக்கலாம். அதாவது சிறுநீர் கழிக்கும் போது ஃபிளஷ் செய்வதற்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படும். அதுவே குளிக்கும் போது சிறுநீர் கழித்தால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இதனால் ஒரு நாளைக்கு செலவாகும் தண்ணீர் அளவானது குறையும். வருடத்திற்கு டன்கணக்கில் தண்ணீர் மிச்சமாகும் என்று அரசர்கள் சொல்லுகின்றன இதன் காரணமாக நம்முடைய சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே குளிக்கும்போது உங்களுக்கு சிறுநீர் வந்தால் தயங்காமல் போகலாம். அது குறித்து ஐயப்பட வேண்டாம்.