
பலர் தங்களது வீடுகளில் எப்போதுமே செருப்பு போட்டு நடப்பது வழக்கம். ஆனால் ஒரு சிலரோ குளிர்காலத்தில் மட்டுமே வீட்டில் செப்பல் போட்டு நடப்பார்கள். இது நல்லது என்று கூட சொல்லலாம். ஏனெனில் இப்படி நடப்பதன் மூலம் குளிரை கம்மியாக உணரலாம். அதுவும் குறிப்பாக சின்ன குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் குளிர்காலத்தில் காலில் செருப்பு போட்டு நடப்பது ரொம்பவே நல்லது.
இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் செப்பல் போட்டு நடப்பது நல்லது என்றாலும், அதனால் உடலில் சில விளைவுகளும் ஏற்படும் தெரியுமா? அவை என்ன என்பதை பற்றி இப்போது விரைவாக பார்க்கலாம்.
நாம் வீட்டில் நடக்கும் போது செருப்பு போடாமல் வெறுங்காலுடன் நடந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைத்தாலும், அதில் தீமைகளும் உள்ளன. ஆம், ஒரு சில வீட்டில் வெறும் காலுடன் நடக்கவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அத்தகையவர்கள் யார் யார் என்பதை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இதையும் படிங்க: உங்க குழந்தையை வெறுங்காலுடன் நடக்க வைக்குறது எவ்ளோ நல்லது தெரியுமா?
முழங்கால் (அ) முதுகு வலி உள்ளவர்கள்..
உங்களுக்கு ஏற்கனவே முழங்கால் வலி அல்லது முதுகு வலி இருந்தால் நீங்கள் வீட்டில் நடக்கும் போது வெறுங்காலுடன் ஒருபோதும் நடக்க வேண்டாம். அதுவும் குறிப்பாக நீங்கள் கடினமான தரையில் வெறுங்காலுடன் நடக்கும் போது உங்களது பாதம் உட்பட்ட உடலின் மற்ற பகுதிகள் அதிக அழுத்தம் ஏற்படும். மேலும் நீங்கள் நீண்ட நேரம் வெறும் காலுடன் நடந்தால் உடலில் பல பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முழங்கால் வலி அல்லது முதுகு வலி இன்னும் அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள்
உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் நீங்கள் வீட்டில் நடக்கும் போது வெறுங்காலுடன் நடக்க வேண்டாம். காரணம் உங்களது உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஈஸ்ட் போன்ற தோல் தொற்று நோய்கள் ஏற்பட்டு, நீரேற்றத்தை பாதிக்கும். இதனால் உங்களது கால் அமைப்பு மாறிவிடும் மற்றும் பிற தொற்று நோய்கள் தாக்கும். சில சமயங்களில் காலை துண்டிக்க வேண்டிய அபாயமும் ஏற்படும்.
50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்..
50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வீட்டில் வெறுங்காலுடன் நடக்கவே கூடாது. காரணம் 50 வயதிற்கு பிறகு உங்களது உள்ளங்காலில் இருக்கும் கொழுப்பு திட்டுகள் மோசமடையத் தொடங்குவதால், இதனால் உங்களுக்கு முழங்கால் வலி இடுப்பு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
தொற்று ஏற்படும்..
எவ்வளவுதான் வீட்டை சுத்தமாக வைத்தாலும் பாக்டீரியாக்கள், கிருமிகள் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் வெறுங்காலில் நடந்தால் பாதத்தில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் எளிதில் தங்கிவிடும். இதனால் கால் விரல்கள் வலி, கால் வெடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் பாதத்தில் ஏற்படும்.
குறிப்பு:
வீட்டில் வெறுங்காலுடன் நடப்பது எல்லோருக்கும் மோசமானதல்ல. அதுபோல புல்வெளி மணல் மற்றும் தரைவிரிப்பு ஆகியவற்றின் மீது வெறுங்காலுடன் நடந்தால் ரொம்பவே நல்லது.
இதையும் படிங்க: தினமும் 1 மணி நேரம் வாக்கிங் போனா இத்தனை நன்மைகளா?!