இட்லியை வெறும் சாதாரண உணவாக பார்த்தால், அதனுடைய பயன் நமக்கு தெரியாது. ஆனால் பிற காலை உணவுகளை விடவும், இட்லிக்கு பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இட்லியில் சேர்க்கப்படும் உளுந்து மிகவும் சத்து நிறைந்தது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு அவசியம் தேவையானதாக உள்ளது.
உடலில் இருக்கும் எலும்புகள் வலு பெற உளுந்து தேவை. எண்ணெய்யில் பொரிக்கப்படாமல், ஆவியில் தயாராகிற உணவு வயிற்றையும் பதம் பார்ப்பது கிடையாது என்பதை தெரிந்துகொள்ளவும். இட்லி மட்டுமில்லாமல், அதற்காக செய்யப்படும் சட்னி, சாம்பார் மற்றும் துவையல் போன்றவற்றிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.
இட்லியை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் தான் ருசியும் சத்தும். அதை விடுத்து ஜாம், நிலக்கடலை வெண்ணெய் மற்றும் சக்கரையுடன் சாப்பிடுவது உகந்தது கிடையாது. வெறும் அரிசி, உளுந்த கலந்த மாவு என்றில்லாமல் இட்லியை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.
கேரட், பீன்ஸை வெட்டி மாவில் போட்டு, அதனுடன் இட்லி ஊற்றி வேகவைத்து சாப்பிடலாம். மேலும் புதினா, கொத்தமல்லி, பச்சை, இஞ்சி உப்பு சேர்த்து அரைத்து மாவுடன் சேர்த்துவிட வேண்டும். நல்ல பக்குவத்துக்கு வந்ததும், அதை இட்லியாக ஊற்றி வேக்காட்டில் வைத்து எடுக்க வேண்டும். இதுவும் மிகவும் ருசியாகவும் இருக்கும். அதேபோன்று குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
இட்லியை இட்லியாகவே செய்து சாப்பிடுவதால் சீக்கரம் சலிப்பு ஏற்பட்டுவிடும். மேலும் வீட்டை விட்டு வெளியே வந்தாலும், பல்வேறு இடங்களிலும் இட்லி எளியதாக கிடைக்கும். அதனால் இட்லியையே வேரைட்டியாக சமைத்து சாப்பிட்டால், எப்போது பார்த்தாலும் இட்லி ஆர்வத்தை ஏற்படுத்தும் உணவாக தெரியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.