வெந்தய
குழம்பு வகைகள் என்றாலே பொதுவாக காரம் சார்ந்தவையாகவே இருக்கும். கார வகை குழம்புகளை அடிக்கடி உண்கொண்டால் வயிறு சார்ந்த பாதிப்புகள் அல்சர், வயிற்று பெருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள இந்த வெந்தயக்குழம்பு மிகவும் உதவும்.
பொதுவாக சாதாரண வெந்தயத்தை வெறும் வயிற்றில் உண்கொண்டால் வயிறு குளிர்ச்சியடையும் என நம் முன்னோர்கள் கூறிய வைத்திய முறையாகும். எப்பேர்பட்ட வயிற்றுப்பிரச்சனையாக இருந்தாலும் இந்த வெந்தயக்குழம்பு போக்கவிடும். ஆரோக்கியமான மற்றும் எளிமையான வெந்தயக் குழம்பை எப்படி செய்வது என இந்தப்பதிவில் காணலாம்....
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் நல்லெண்ணெய்
ஒரு ஸ்பூன் கடலெண்ணெய்
அரை ஸ்பூன் வெந்தயம்
ஒரு ஸ்பூன் கடுகு
100 கிராம் சின்ன வெங்காயம்
10 பல் பூண்டு
சிறிதளவு கருவேப்பிலை
ஒரு ஸ்பூன் - குழம்பு மிளகாய் தூள்(குழம்பு பொடி)
100 கிராம் புளி
தேவையான அளவு உப்பு
செய்முறை
புளி கரைகலுக்காக, முன்னதாக ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் உற்றி புளியை நன்கு ஊரவைக்க வேண்டும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அதனுடன் கடலை எண்ணையையும் சேர்த்து நன்றாக சூடாக்க வேண்டும். அதன்பிறகு அதில் வெந்தயம் மற்றும் கடுகை போட்டு நன்றாக தாளிக்க வேண்டும். வெந்தயம் கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவசர காலை உணவுக்கு ஏற்றது ''தயிர் சாண்ட்விச்''! - ஸ்பீடா செஞ்சு சாப்பிட்டு போயிட்டே இருக்கலாம்!!
பின்னர், அதனுடன் சிறிய வெங்காயத்தை சேர்க்கவேண்டும். வெங்காயத்தினை பொடியாக அறியாமல் பாதியாக வெட்டி போடவேண்டும். அதனுடன் பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றை அறிந்து போடவேண்டும். பின், அதனுடன் மிளகாய்த்தூள், தனியாதூள் மற்றும் சீரகப்பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு அதனுடன் தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஊறவைத்த புளிக்கரைசல் வடிகட்டி ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். குழம்பு நன்கு கொதித்த வந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தேவையான அளவு உப்பு கலக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெந்தய குழம்பு ரெடி!
நெய்யுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் மாரடைப்பு குட்பை..!! புற்றுநோய்க்கு பை பை..!!