Road trips from India: சாலைகள் வழி பயணம்! அற்புத அனுபவத்தைக் கொடுக்கும் சுற்றுலாத் தலங்கள்!

First Published | Mar 2, 2023, 1:55 PM IST

உலகின் பல நாடுகளில் சாலை சுற்றுலாப் பயணங்களுக்கு ஏற்றவையாக உள்ளன. இத்தொகுப்பில் இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகள் உள்பட புகழ்பெற்ற சாலை சுற்றுலா பயணத்துக்கு பேர் பெற்ற இடங்களைப் பார்க்கலாம்.

வியட்நாம்

வியட்நாம் அதன் பசுமையான நிலப்பரப்புகளுடன் சுற்றுப் பயணிகளை அழைக்கிறது. இந்தியாவில் இருந்து சாலை வழியாக வியட்நாமிற்குள் நுழைய சர்வதேச ஓட்டுநர் உரிமத்துடன் கார்னெட் மற்றும் இ-விசாவும் தேவை.

தாய்லாந்து

மோரே வழியாக தாய்லாந்தைச் சென்றடைய இந்தியர்கள் மியான்மரைக் கடந்து செல்ல வேண்டும். இந்த பயணத்திற்கு சர்வதேச ஓட்டுநர் உரிமத்துடன் இ-விசா மற்றும் தேவையான அனுமதிகள் தேவை.

Tap to resize

நேபாளம்

இந்தியாவிலிருந்து சுனௌலி எல்லை வழியாக நேபாளத்திற்குச் செல்லலாம். இது மிகவும் எளிதான பயணமாகவும் அமைநும். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் அடையாள அட்டை ஆகியவை தேவை. இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் விசா தேவை இல்லை.

பூடான்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று பூடான். ஓட்டுநர் உரிமம், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் நுழைவு அனுமதி தேவை. பூடானுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.

பங்களாதேஷ்

பங்களாதேஷ் இந்தியாவில் இருந்து சாலைப் பயணத்திற்கு ஏற்றது. கார்னெட், சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருக்கவேண்டும். கார்நெட், இந்திய பாஸ்போர்ட் ஆகியவை இந்தப் பயணத்திற்குத் தேவை.

இத்தாலி

இந்தியாவிலிருந்து சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான், துருக்கி, கிரீஸ் வழியாக இத்தாலிக்குச் செல்லலாம். அனைத்து நாடுகளிலும் தனித்தனி விசா மற்றும் பிற அனுமதிகள் பெறவேண்டும்.

சுவிட்சர்லாந்து

இத்தாலிக்கு அப்பால் சுவிட்சர்லாந்து காத்திருக்கிறது. இந்தியாவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு சாலைப் பயணத்திற்கு விசா, கார்னெட் மற்றும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் ஆகியவை அவசியம்.

மலேசியா

அழகான கடற்கரைகள், நிலக்காட்சிகள் கொண்ட மலேசியாவில் சாலைப் பயணத்திற்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம், கார்னெட் மற்றும் ஒற்றை நுழைவு விசா தேவை.

மியான்மர்

இந்தியாவின் மணிப்பூரிலிருந்து மியான்மருக்கு சாலையில் செல்லலாம், தரைவழி அனுமதி, விசா, சுங்க அனுமதி மற்றும் எம்எம்டி அனுமதி ஆகியவை தேவை.

இலங்கை

தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லவேண்டும். இந்தப் பயணத்துக்கு இ-விசா, கார்னெட், மற்றும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் ஆகியவை அவசியம்.

திபெத்

இந்தியாவில் இருந்து திபெத் செல்லும் பயணத்திற்கு சிறப்பு தரைவழி அனுமதி, சர்வதேச ஓட்டுநர் உரிமம், சீன விசா, திபெத் அனுமதி ஆகியவை அவசியம்.

Latest Videos

click me!