Interesting Facts: காரமா சாப்பிட்டா மூக்குல தண்ணி வருதா? வியர்த்து கொட்டுதா? இதுக்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

Published : Jun 29, 2026, 04:29 PM IST

Interesting Facts: நிறைய பேருக்கு காரசாரமா சாப்பிட ரொம்பப் பிடிக்கும். ஆனா, அப்படி சாப்பிடும்போது மூக்குல இருந்தும், வாயில இருந்தும் தண்ணி கொட்டும். இதுக்குப் பின்னாடி இருக்கிற அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கலாம் வாங்க. 

PREV
15
Scientific Reason Why Spicy Food Causes a Runny Nose

காரமான அல்லது ரொம்ப சூடான உணவுகளை சாப்பிடும்போது உங்களுக்கும் மூக்குல இருந்து தண்ணி வந்திருக்கா? உண்மையில, இது உடலின் ஒரு சாதாரண செயல்பாடுதான். ஆனா, சில சமயங்கள்ல இது வேற சில உடல்நலப் பிரச்சினைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். காரமான, சூடான உணவுகளை சாப்பிட்டதும் வியர்ப்பது அல்லது மூக்கில் நீர் வடிவதை 'கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்' (Gustatory Sweating) அப்படின்னு சொல்றாங்க.

இதையும் படியுங்கள்:  மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!

25
'கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்'னா என்ன?

‘கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்’ அப்படிங்கிறது, ஒரு உணவை சாப்பிடும்போது அல்லது சாப்பிடுவதை நினைக்கும்போதே முகம், தலை, கழுத்து மற்றும் மூக்கைச் சுற்றி வியர்ப்பதுதான். இது பொதுவா காரமான அல்லது சூடான உணவுகளை சாப்பிடும்போது நடக்கும். உடல் வெப்பநிலையை சீராக்க நம்ம வியர்வை சுரப்பிகள் இப்படி வேலை செய்யுதுன்னு சுகாதார நிபுணர்கள் சொல்றாங்க. இது உடலின் ஒரு சாதாரண செயல்பாடுகளில் ஒன்றுதான்.

இதையும் படியுங்கள்:  சாதம் மீந்துடுச்சா? கவலையை விடுங்க.! மழைக்கு சூடா மொறு மொறு கட்லெட் செஞ்சு அசத்துங்க.! இதோ செய்முறை.!

35
ஆய்வில் வெளிவந்த உண்மை

ஒரு ஆய்வுல, உணவு சுவையால் ஒருவருக்கு வியர்ப்பது எவ்வளவு இயல்பானதுன்னு தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சாங்க. இதுக்காக, 2,000-க்கும் மேற்பட்டவங்களை வெச்சு ஒரு சோதனை நடத்துனாங்க. இதுல, நீரிழிவு நோயாளிகளும், ஆரோக்கியமானவங்களும் இருந்தாங்க. ஆரோக்கியமானவங்கள்ல 5% பேர், சாப்பிடும்போது வியர்க்கிறதா சொன்னாங்க. ஆனா, நீரிழிவு நோயாளிகள்ல இந்த எண்ணிக்கை 10-13% ஆக இருந்துச்சு. இதுமட்டுமில்லாம, சிலருக்கு முகம் மற்றும் தலையில வியர்க்கிறதாவும் சொன்னாங்க.

இதையும் படியுங்கள்:  ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

45
மிளகாயில் உள்ள மூலக்கூறுதான் காரணம்

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (National Library of Medicine), மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' (Capsaicin) என்ற மூலக்கூறுதான் இந்த 'கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்' ஏற்பட முக்கிய காரணம் என கண்டுபிடிச்சு இருக்காங்க. இந்த கேப்சைசின், உடலின் வெப்பநிலை உண்மையிலேயே உயரவில்லை என்றாலும், உயர்ந்தது போன்ற ஒரு போலியான உணர்வை ஏற்படுத்துகிறது. 

இதையும் படியுங்கள்:  உங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா? இல்லை இதுவே கடைசி பிறவியா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

55
மூளைக்கு செல்லும் சிக்னல்

கேப்சைசின் நாக்கு மற்றும் வாயில் உள்ள நரம்பு முனைகளைத் தூண்டும்போது, மூளைக்கு வெப்பம் குறித்த சிக்னல்கள் செல்கின்றன. உடனே, உடலைக் குளிர்விக்க மூளை வியர்வையை சுரக்கச் சொல்கிறது. இதனால்தான், சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் அல்லது காரமான உணவுகளை சாப்பிட்டதும் முகம் மற்றும் தலையில் இருந்து வியர்வை கொட்டுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories