Fun Facts: நம்ம ஊர் மாதிரி ஏன் அமெரிக்காவில் செங்கல் வீடு கட்டுவதில்லை? பின்னணியில் இருக்கும் ஆச்சரியமான உண்மைகள்.!

Published : Jun 26, 2026, 12:54 PM IST

Why American House Made of Wood: அமெரிக்காவில் வீடுகள் நம் ஊர்களைப் போல செங்கல், சிமெண்ட் கொண்டு கட்டப்படுவதில்லை. இதற்கான காரணங்கள் குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அது குறித்து விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள். 

PREV
17
Why American House Made of Wood

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கும், அமெரிக்கா போன்ற வளர்ந்துவிட்ட நாடுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அமெரிக்காவில் பெரும்பாலான வீடுகள் நம் ஊரை போல செங்கல் மற்றும் சிமெண்டால் கட்டப்படாமல் மரத்தைக் கொண்டு கட்டப்படுகின்றன. இதற்கு பின்னால் முக்கியமான பொருளாதார, புவியியல் மற்றும் நடைமுறைக் காரணங்கள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?

27
மரங்களின் தாராளக் கிடைப்புத்தன்மை

அமெரிக்கர்கள் மரங்களைக் கொண்டு வீடு கட்டுவதற்கு முதல் காரணம் அங்கு கிடைக்கும் மரங்களின் தாராள கிடைப்புத் தன்மை தான். அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காடுகள் உள்ளன. குறிப்பாக கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மென்மையான மரங்கள் (Softwoods) அங்கு மிக மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றன. உள்ளூரிலேயே அதிக அளவில் மரம் கிடைப்பதால் அதை வெட்டி, பதப்படுத்தி வீடுகள் கட்டுவது அவர்களுக்கு எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:  Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!

37
மிகக் குறைவான கட்டுமானச் செலவு மற்றும் நேரம்

அமெரிக்கர்கள் மர வீடுகளை தேர்ந்தெடுப்பதற்கு குறைந்த கட்டுமானச் செலவு மற்றும் நேரம் முக்கிய காரணமாகும். ஒரு செங்கல் வீடு கட்டுவதற்கு பல மாதங்கள் அல்லது சில சமயங்களில் ஒரு வருடம் கூட ஆகும். ஆனால் மரவீட்டை கட்டமைப்பதற்கான பாகங்கள் முன்பே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு ரெடிமேடாக கிடைப்பதால் சில வாரங்களிலேயே வீட்டை முழுமையாக கட்டி முடித்து விடலாம். மேலும் அமெரிக்காவில் மனித உழைப்புக்கான கூலி மிக அதிகம். செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டப்படும் போது அதிகப்படியான தொழிலாளர்களும், நீண்ட நாட்களும் தேவைப்படும். இதனால் கட்டுமானச் செலவு பன்மடங்கு உயரும். மர வீடுகளை குறைந்த ஆட்களைக் கொண்டு வேகமாக முடிக்க முடியும் என்பதால் கூலி செலவு மிச்சம் ஆகிறது.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: அமெரிக்காவில் கரண்ட் ஒயர்கள் ஏன் வெளியில் தெரிவதில்லை? இந்தியாவில் இது சாத்தியமா?

47
காலநிலைக்கு ஏற்ற இன்சுலேஷன்

அமெரிக்காவில் காலநிலை மாற்றங்களும் மர வீடுகளை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அமெரிக்காவில் குளிர்காலம் மிக மோசமானதாக இருக்கும். செங்கல் மற்றும் கான்கிரீட் சுவர்கள் வீட்டிற்கு வெளியே உள்ள குளிரை அப்படியே வீட்டிற்குள் கடத்தும் தன்மையுடையது. ஆனால் மர சுவர்களுக்கு இடையே காலியான இடங்களில் இருக்கும் அந்த இடைவெளியில் இன்சுலேசன் எனப்படும் வெப்பத்தை கடத்தாக பொருட்கள் நிரப்பப்படும். இது குளிர் காலத்தில் வீட்டை வெதுவெதுப்பாகவும், கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதனால் மின்சாரக் கட்டணமும் குறைகிறது.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?

57
இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் நெகிழ்வுத்தன்மை

அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற பகுதிகள் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் மண்டலங்களாகும். செங்கல் வீடுகள் நிலநடுக்கத்தின் பொழுது எளிதில் விரிசல் விட்டு இடிந்து விடும். ஆனால் மரத்திற்கு நெகிழ்வுத் தன்மை அதிகம். நிலநடுக்கத்தின் பொழுது மரம் லேசாக வளைந்து கொடுக்குமே தவிர எளிதில் உடையாது. மேலும் அமெரிக்காவில் சூறாவளிக் காற்று அதிகமாக வீசும். மிகக் கடுமையான சூறாவளி வரும் பொழுது செங்கல் வீடாக இருந்தால் அப்படியே இடிந்து விடும். இடிந்த கட்டிடத்தை மீண்டும் கட்டுவது மிகக் கடினம். ஆனால் மர வீடுகள் இடிந்தால் அதை எளிமையாக அகற்றிவிட்டு குறைந்து செலவில் வேகமாக மறுபடி கட்டி விடலாம்.

இதையும் படியுங்கள்:  Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?

67
எளிதான பராமரிப்பு மற்றும் மாற்றங்கள்

மர வீடுகளில் குழாய்கள் இணைப்பது, பிளம்பிங் வேலைகள் பார்ப்பது, மின்சார இணைப்புகளை கொடுப்பது ஆகிய வேலைகளை எளிதாக செய்ய முடியும். பழுது ஏற்பட்டால் சுவரின் ஒரு பகுதியை மட்டும் எளிதாக வெட்டி எடுத்துவிட்டு பழுது பார்த்துவிட்டு மீண்டும் மாட்டி விடலாம். வீட்டன் அமைப்பை மாற்றவோ புதிய பகுதியை இணைக்கவோ நினைத்தால் மர வீடுகளில் அது மிகவும் எளிதானது. செங்கல் சுவரை இடிப்பதைப் போல பெரும் சிரமங்கள் இதில் இருக்காது.

இதையும் படியுங்கள்:  Fun Facts: ஆட்டோக்களில் ஏன் 3 சக்கரம் இருக்குனு தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது.!

77
எளிதான பராமரிப்பு மற்றும் மாற்றங்கள்

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் உள்ளூர் கட்டுமான விதிகள் மர வீடுகளுக்கு சாதகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அங்கு வீடு வாங்குபவர்கள் கண்டிப்பாக காப்பீடு செய்ய வேண்டும். மர வீடுகளை கட்டுவதற்கும், பழுது பார்ப்பதற்கும் ஆகும் செலவு குறைவு என்பதால் காப்பீட்டுத் தொகையும் நடுத்தர மக்களுக்கு ஏதுவாக இருக்கிறது. அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற மிகப்பெரிய கட்டிடங்களை இரும்பு மற்றும் கான்கிரீட் கொண்டுதான் கட்டுகிறார்கள். ஆனால் தனி நபர் வீடுகளுக்கு எப்போதும் மரமே அவர்களின் முதல் தேர்வாக உள்ளது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories