Interesting Facts: ரயில்வே துறை நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம், ஹைட்ரஜன் ரயிலையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு வந்தே பாரத் ரயிலை உருவாக்க உண்மையில் எவ்வளவு செலவாகும் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பான இந்தியன் ரயில்வே, வேகமான பயணத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் ஒரு பகுதியாக செமி-ஹைஸ்பீட் ரயிலான வந்தே பாரத் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைட்ரஜன் ரயிலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரயில்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.
வந்தே பாரத், மேலே உள்ள மின்சாரக் கம்பிகள் மூலம் நேரடியாக மின்சாரம் பெற்று மணிக்கு 160 முதல் 180 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. ஆனால், ஹைட்ரஜன் ரயில் தனக்குள் இருக்கும் எரிபொருள் செல் (fuel cell) மூலம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை இணைத்து, தனக்கான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்து இயங்குகிறது. இதன் வேகம் மணிக்கு 75 முதல் 120 கி.மீ வரை மட்டுமே. பரபரப்பான நகரங்களுக்கு இடையேயான நீண்ட தூர பயணங்களுக்கு வந்தே பாரத் பயன்படுகிறது. மின்மயமாக்கப்படாத மலைப்பகுதிகள், பாரம்பரிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயில் முழுவதுமாக ஏசி வசதி மற்றும் 'கவச்' பாதுகாப்பு அமைப்புடன் வருகிறது. இந்த ரயிலை உருவாக்க சுமார் ₹97 கோடி செலவாகிறது. மறுபுறம், ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு என்பதால், ஹைட்ரஜன் ரயிலில் கசிவைக் கண்டறியும் கருவிகள், தானியங்கி ஷட்-ஆஃப் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ரயிலை உருவாக்க ₹111.83 கோடி செலவாகிறது. வந்தே பாரத் வேகம் மற்றும் சொகுசு பயணத்திற்கும், ஹைட்ரஜன் ரயில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
ஒரு பெட்டியின் செலவு: தோராயமாக ₹6.5 கோடி முதல் ₹7.5 கோடி வரை.
சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்ட ஆரம்பகால ரயில்கள் ₹100 - ₹106 கோடியில் தயாரிக்கப்பட்ட நிலையில், கூடுதல் பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் சேர்க்கப்பட்டு தற்போது ஒரு ரயிலுக்கு சராசரியாக ₹115 கோடி செலவாகிறது.
56
ஸ்லீப்பர் மற்றும் அலுமினிய வந்தே பாரத் (24 பெட்டிகள்)
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் (24 பெட்டிகள்): அதிக தூர இரவுக் பயணங்களுக்கான நவீன வசதிகள் கொண்ட 24 பெட்டிகள் அடங்கிய பெரிய ஸ்லீப்பர் ரயில்கள் சுமார் ₹200 - ₹290 கோடி வரை தயாரிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.
அலுமினிய உடலமைப்பு கொண்ட ரயில்கள்: குறைந்த எடையில் அதிக வேகத்தில் (மணிக்கு 200 கி.மீ வரை) செல்லக்கூடிய அலுமினிய வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஒரு ரயிலுக்குச் சுமார் ₹150 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
66
செலவு அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்கள்
தனி இன்ஜின் இல்லாத தொழில்நுட்பம்: சாதாரண ரயில்கள் போல தனியாக ஒரு இன்ஜின் இழுக்காமல், ஒவ்வொரு மாற்றுப் பெட்டியிலும் என்ஜின் மோட்டார்கள் (Distributed Traction Power) இணைக்கப்பட்டுள்ளன.
தானியங்கி கதவுகள் & பாதுகாப்பு: மெட்ரோ ரயில்களைப் போலத் தானாகத் திறக்கும் கதவுகள் மற்றும் 'கவச்' (Kavach - Train Collision Avoidance System) விபத்து தடுப்புத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நவீன வசதிகள்: சுழலும் நாற்காலிகள் (Rotating Chairs), தொடுதிரை வசதிகள், வைஃபை, பயோ-வேகப் கழிப்பறைகள் மற்றும் நவீன பிரேக்கிங் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து இதேபோன்ற சொகுசு ரயில்களை இறக்குமதி செய்தால் ஒரு ரயிலுக்கு ₹250 கோடிக்கும் மேல் செலவாகும் என்ற நிலையில், முற்றிலும் இந்தியாவில் 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் கீழ் தயாரிப்பதால் இந்தச் செலவு மிகக் குறைவாகவே உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.