Interesting Facts: அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு இத்தனை சலுகைகளா? இந்திய ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தெரியுமா?

Published : Jul 31, 2026, 06:14 PM IST

US Army vs Indian Army: அமெரிக்க ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொண்ட இந்தியப் பெண் ஒருவர், அங்கு ராணுவத்தினருக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி விளக்கியுள்ளார். அமெரிக்கா மற்றும் இந்திய வீரர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

PREV
16
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் டாப் 3 சலுகைகள்..

"நான் ஒரு அமெரிக்க ராணுவ வீரரை கல்யாணம் பண்ணியிருக்கேன். ஒரு மிலிட்டரி குடும்பமா எங்களுக்குக் கிடைக்கிற டாப் 3 சலுகைகள் இதோ!" என்று இந்திய பெண் மேகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதில், அமெரிக்க அரசு ராணுவக் குடும்பங்களுக்கு வழங்கும் முக்கிய சலுகைகள் குறித்து அவரும் அவரது கணவரும் தெளிவாக விளக்கியுள்ளனர்.

1. முற்றிலும் இலவச உயர் கல்வி

அமெரிக்கா முழுவதும் உள்ள எந்தப் பள்ளி அல்லது கல்லூரியிலும் உயர் கல்வியை முற்றிலும் இலவசமாகப் படிக்கலாம். அதுமட்டுமின்றி, படிப்பதற்காக ராணுவத்திடமிருந்து மாதந்தோறும் 1,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹83,000) சிறப்பு அலவன்ஸாக வழங்கப்படும் என்று மேகாவின் கணவர் கூறுகிறார்.

2. வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம்

சுகாதாரப் பாதுகாப்பில் அமெரிக்க ராணுவம் தன் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நாட்டில் உள்ள எந்த மருத்துவமனையிலும், சிறியதோ பெரியதோ, எந்தவொரு சிகிச்சைக்கும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். இந்தச் சலுகை அவர்களின் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

3. மிக எளிதாக சொந்த வீடு

வெளிநாடுகளில் வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம். ஆனால் அமெரிக்க ராணுவக் குடும்பங்களுக்கு இது மிகவும் சுலபம். சொத்து வாங்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் ஆவணச் செலவுகளாக சுமார் 140 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹13,000) மட்டும் செலுத்தினால் போதும். சொத்துப் பத்திரங்கள் மற்றும் வீட்டுச் சாவிகள் உங்கள் கைக்கு வந்துவிடும் என்று இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது.

இதையும் படியுங்கள் - Western Toilet: வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?

26
அமெரிக்க வீரர்களுக்கான சலுகைகள் குறித்து இந்தியர்களின் ரியாக்‌ஷன்..

அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து மேகா வெளியிட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நெட்டிசன்களிடமிருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு நாடு தனது பாதுகாப்பிற்காக நிற்கும் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இவ்வளவு மரியாதை மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறதா என்று பலர் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வீடியோவைப் பார்த்த பல பெற்றோர்களும், இளைஞர்களும் "அமெரிக்க ராணுவத்தில் சேர என்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை எப்படி?" என்பது போன்ற சந்தேகங்களை கமெண்ட்களில் கேட்டு வருகின்றனர்.

ஒரு இந்தியப் பெண்ணாக, வெளிநாட்டு ராணுவ அமைப்பில் உள்ள சிறப்பம்சங்களை விரிவாக விளக்கிய மேகாவின் இந்த முயற்சி, நெட்டிசன்களுக்குப் பல புதிய விஷயங்களைத் தந்துள்ளது. ராணுவப் பணி என்பது வெறும் வேலை மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்திற்கு முழுமையான வாழ்க்கை பாதுகாப்பை வழங்கும் ஒரு அமைப்பு என்பதை இந்த வீடியோ மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் - Egg Formation: கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?

36
இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்

7th CPC Pay Scale: 7-வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஊதியம் (Basic Pay) மற்றும் பஞ்சப்படி (Dearness Allowance - DA) வழங்கப்படுகிறது. 

MSP (Military Service Pay): ராணுவ சேவைக்கான பிரத்யேக கூடுதல் தொகை (ரூ. 5,200 - ரூ. 15,500 வரை) வழங்கப்படுகிறது. 

Special Border/Siachen Allowance: சியாச்சின் போன்ற உலகின் மிகக் கடினமான உயரமான எல்லைப் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு கணிசமான கூடுதல் ஆபத்துப் படிகள் (Siachen Allowance) உண்டு.

இதையும் படியுங்கள் - Interesting Facts: ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

46
மருத்துவ வசதிகள்

அமெரிக்கா:

TRICARE Scheme: சேவை செய்யும் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 100% இலவச மருத்துவக் காப்பீடு.

VA Healthcare: ஓய்வு பெற்ற வீரர்களுக்கு (Veterans) 'Veterans Affairs' துறை மூலம் வாழ்நாள் முழுமைக்கும் பிரத்யேக இலவச மருத்துவம் மற்றும் மனநலச் சிகிச்சைகள் (Mental Health Care) வழங்கப்படுகின்றன.

இந்தியா:

 MH & Command Hospitals: பணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ராணுவ மருத்துவமனைகளில் (Military Hospitals) உயர்தர இலவச சிகிச்சை. 

ECHS (Ex-Servicemen Contributory Health Scheme): ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் வாழ்நாள் முழுவதும் ராணுவ மற்றும் ஒப்பந்த தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை.

இதையும் படியுங்கள் - Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?

56
ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால சலுகைகள்

அமெரிக்கா: 

Blended Retirement System (BRS): 20 ஆண்டுகள் முழுமையாகப் பணியாற்றினால் மட்டுமே முழு ஓய்வூதியம் கிடைக்கும். 20 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றி விலகுபவர்களுக்கு Thrift Savings Plan (TSP) எனும் பங்களிப்பு நிதி அமைப்பின் மூலமே பணம் வழங்கப்படும்.

இந்தியா: 

Old Pension Scheme (OPS): ராணுவ வீரர்களுக்கு இன்னமும் வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டமே (Traditional Pension Scheme) நடைமுறையில் உள்ளது. 15-20 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் 50% கடைசி ஊதியம் ஓய்வூதியமாகக் கிடைக்கும். 

OROP (One Rank One Pension): ஒரே பதவியில் சமகாலச் சேவை செய்து ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள் - Facts: மழை எவ்வாறு அளக்கப்படுகிறது? மழைப்பொழிவை மி.மீ மற்றும் செ.மீ என அளப்பது ஏன் தெரியுமா?

66
பிற குடும்ப மற்றும் சமூகச் சலுகைகள்

அமெரிக்கா: 

VA Home Loans: குறைந்த வட்டி அல்லது 'Zero Down Payment' (முன்பணம் இன்றி) வீடு வாங்குவதற்கான கடன் வசதி.வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள், உணவகங்களில் வீரர்களுக்கு பிரத்யேக 'Military Discount' சலுகைகள். 

இந்தியா: 

CSD Canteen: வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை மற்றும் வாகனங்களை வரிக் குறைப்புடன் கூடிய மானிய விலையில் வாங்கும் வசதி (Canteen Stores Department). 

Rail/Air LTC Travel: ஆண்டுதோறும் சொந்த ஊருக்குச் செல்ல இலவச அல்லது மானியக் கட்டணப் பயணச் சீட்டுகள் (LTC). அரசு வேலை வாய்ப்புகளில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு (Ex-Servicemen Quota).

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories