Roti: சோறுக்கு பதிலா 30 நாள் சோள ரொட்டி சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.!

Published : Jul 31, 2026, 03:33 PM IST

Health Benefits of Chola Roti: சமீப காலமா சிறுதானிய உணவுகள் மேல பலருக்கும் ஆர்வம் அதிகமாகியிருக்கு. 30 நாளைக்கு சாதத்தை நிறுத்திட்டு சோள ரொட்டி சாப்பிட்டா உடம்புல என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு இங்க பார்க்கலாம்.

PREV
15
Health Benefits of Chola Roti

சாதத்துக்குப் பதிலா சோள ரொட்டி சாப்பிடுறதுல பல நன்மைகள் இருக்குன்னு நிபுணர்கள் சொல்றாங்க. சோளத்துல நார்ச்சத்து அதிகம். இதனால, ரொட்டி சாப்பிட்டதும் வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும், பசி எடுக்காது. தேவையில்லாம நொறுக்குத்தீனி சாப்பிடுறது குறையும். இதனால, உடல் எடை படிப்படியா குறைய வாய்ப்பிருக்கு.

இதையும் படியுங்கள் - Western Toilet: வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?

25
சர்க்கரை அளவு கட்டுப்பாடு

சோளத்தோட கிளைசெமிக் இன்டெக்ஸ், அரிசியை விடக் குறைவு. இதனால, சாப்பிட்ட உடனே ரத்தத்துல சர்க்கரை அளவு கிடுகிடுன்னு ஏறுறது குறையும். சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கும், அந்த பாதிப்பு வர்ற அபாயத்துல இருக்கிறவங்களுக்கும் இது ரொம்ப உதவியா இருக்கும். ஆனா, மருந்து சாப்பிடுறவங்க உணவுல மாற்றம் செய்றதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட கேட்கணும்.

இதையும் படியுங்கள் - Egg Formation: கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?

35
செரிமானத்தில் மாற்றம்

தொடர்ந்து 30 நாளைக்கு சோள ரொட்டி சாப்பிட்டா, செரிமான மண்டலத்துலயும் நல்ல மாற்றங்கள் தெரியும். இதுல நார்ச்சத்து அதிகமா இருக்குறதால, மலச்சிக்கல் பிரச்சனை குறைஞ்சு, குடல் செயல்பாடு சீராகும். ஆனா, திடீர்னு அதிக நார்ச்சத்து எடுத்துக்கும்போது சிலருக்கு வயிறு உப்பசம், கேஸ் மாதிரி பிரச்சனைகள் வரலாம். அதனால, படிப்படியா உணவுல சேர்த்துக்கிட்டு, நிறைய தண்ணீர் குடிக்கணும்.

இதையும் படியுங்கள் - Interesting Facts: ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

45
நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு

சோளத்துல மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின்களும் நிறைய இருக்கு. இது உடலுக்கு சக்தி கொடுத்து, தசைகள் மற்றும் நரம்புகளோட செயல்பாட்டை மேம்படுத்தும். இதுல இருக்குற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடம்பு செல்களை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்புல இருந்து பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள் - Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?

55
சாதத்தை தவிர்க்க முடியாதவர்கள்
எல்லாராலயும் சாதத்தை முழுசா நிறுத்த முடியாது. வெள்ளை அரிசியும் உடலுக்கு கார்போஹைட்ரேட் வழியா ஆற்றலைத் தரும் ஒரு முக்கியமான உணவுதான். ஆனா, அதிகமா சாப்பிடுறதுதான் பிரச்சனை. அதனால, சாதத்தை நிறுத்த முடியாதவங்க, அளவா சாப்பிட்டுட்டு, வாரம் சில நாட்கள் சோளம், கேழ்வரகு, கம்பு மாதிரியான சிறுதானியங்களை சேர்த்துக்கலாம். கூடவே, நல்ல தூக்கம், உடற்பயிற்சி, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், போதுமான புரோட்டீன், தண்ணீர் குடிக்கிறதும் ரொம்ப முக்கியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories