
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இந்த நாள் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கள் ஆகும். அந்த வகையில், இந்த 2025 ஆம் ஆண்டில் இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளது. இந்த நாள் நம் நாட்டிற்கு சொந்தமான அரசியலமைப்பை உருவாக்கி ஏற்றுக் கொண்டதையும் குறிக்கிறது மற்றும் நாட்டின் இன்றியமையமை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவிக்கிறது.
குடியரசு தினம் என்பது இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை கொண்டாடவும், நாட்டில் அனைவரும் சமம் என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது இந்நாளில் நாட்டின் பல்வேறு சாதிகள் மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு வழங்குகிறது. குடியரசு தினம் நமது அரசியலமைப்பு முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது மட்டுமல்லாமல், நமது உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேசிய விடுமுறை நாளாக அளிக்கப்படுகிறது. இந்திய ஒவ்வொருவரும் குடியரசு தின விழாவை கொண்டாடும் இந்நாளை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு முக்கிய ஈர்ப்பாகும். இந்த அணிவகுப்பானது ராணுவ பலம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்தும். இந்த அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் சுமார் 600 மணி நேரம் பயிற்சி செய்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர். ராஜேந்திர பிரசாத் ஜனவரி 26 250 அன்று இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நாளில் தான் தேசிய அரசியலமைப்பு முறைப்படி இற்றப்பட்டது. மேலும் முதல் குடியரசு தின அணிவகுப்பு இந்தியா கேட்டில் நடைபெற்றது.
இதையும் படிங்க: 20 ஆண்டு கனவு; ஸ்ரீநகர்-கன்னியாகுமரி நேரடி ரயில் சேவை; பிரதமர் மோடி ஜன.26ல் தொடங்கி வைக்கிறார்?
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிற நாட்டின் பிரதமர், ஜனாதிபதி அல்லது ஒரு நாட்டின் அதிபதி கலந்து கொள்ளவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இப்படி அழைப்பது இந்தியாவின் வெளியுற கொள்கையில் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் சின்னமாகும்.
இதையும் படிங்க: கொடியேற்றும் ஆளுநர் ரவி.! சென்னையில் தடபுடலாக நடைபெற்ற குடியரசு தின ஒத்திகை
குடியரசு தினத்தன்று முதல் துப்பாக்கி சூடு நடந்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்படும். அடுத்த துப்பாக்கி சூடு 52 வினாடிகளுக்கு பிறகு தான் நடக்கும். தேசிய பாடல் இந்தியாவின் தேசபக்தியை ஒற்றுமையும் வெளிப்படுத்துகின்றது. இந்திய ராணுவமான படை மற்றும் கடற்படை இசை குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை விழாவின் சிறப்பம்சமாகும்.