
சர்க்கரை உலக அளவில் இருக்கும் ஒரு பொதுவான நோய்களில் ஒன்றாகும். மோசமான வாழ்க்கை முறையில் இந்த நோய் யாரை வேண்டுமானாலும் பலியாக்கும். முக்கியமாக இந்த நோய்க்கு நிரந்தர சிகிச்சை என்று எதுவுமில்லை. சரியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதன் மூலம் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். ஒருவேளை இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால் பல கடுமையான நோய்களை இது ஏற்படுத்தும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பல மருந்துகள் இருந்தாலும், வேப்ப இலையை கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்படுத்து விடலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். அது உண்மையா என்பதை பற்றி இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.
வேப்பயிலை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா?
வேப்ப இலையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால், பழங்காலத்திலிருந்து பல நோய்களையும் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி என்பதால், இது இன்சுலின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யும் கால்சியம் இதில் உள்ளது. இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து நீரிழிவு நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
உண்மையில், சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் தாது பற்றாக்குறை விரைவாக தொடங்கும். இதன் காரணமாக அவர்களுக்கு தசை மற்றும் மூட்டு வலி ஏற்பட தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், வேம்பு அவர்களது எலும்பின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். அதுபோல சர்க்கரை நோயாளிகளுக்கு ஃபிளாவனாய்டுகள் மிகவும் நன்மை. இது நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது. வேப்ப இலையில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: சுகர் நோயாளிங்க காலைல சாப்பிடலன்னா உடம்புல என்ன நடக்கும் தெரியுமா?
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேப்ப இலையை எப்படி சாப்பிட வேண்டும்?
வேப்பிலை கசப்பாக இருக்கும். ஆனால் தினமும் காலை வெறும் வயிற்றில் 4-5 வேப்ப இலைகளை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ஒருவேளை வேப்ப இலையை பச்சையாக இப்படி சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதன் பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். முக்கியமாக வேப்ப இலையை மட்டுமே நம்பி இருக்காதீர்கள். சறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் பின்பற்றுங்கள்.
இதையும் படிங்க: சுகர் இருக்கா? உங்களுக்கான பெஸ்ட் காலை உணவுகள் இதுதான்!!
வேப்ப இலையின் பிற நன்மைகள்:
- வேப்பிலைக்கு உடலில் ரத்தத்தை முழுமையாக சுத்திகரிக்கும் பண்புகள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்களது ரத்தத்தை சுத்தமாக வைக்க உதவுகிறது.
- வேப்பிலை வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் பண்புகள் அமிலத்தன்மைக்கு மிகவும் நல்லது. இதற்கு வேப்ப இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி நீங்கும்.
- வேப்ப இலையில் பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் சளி, இருமல் போன்ற நோய்கள் குணமாக்க முடியும்.
முக்கிய குறிப்பு : ஒரே நேரத்தில் அதிகளவு வேப்பிலைகளை சாப்பிட வேண்டாம். சிறிய அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் பிற பிரச்சனைகள் இருந்தால் வேப்பிலை சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.