அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்களில் பலருக்குக் கூட ரயில்வே துறையின் சில அதிரடி விதிகளும், சலுகைகளும் தெரிவதே இல்லை. உங்களது அடுத்த பயணத்தை இன்னும் ஈஸியாகவும், பாதுகாப்பாகவும் மாற்ற நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!
லோயர் பெர்த் பயணிகள் சிலர் பகலிலேயே தூங்குவதால் மிடில் பெர்த் காரர்கள் உட்கார முடியாமல் அவதிப்படுவார்கள். ஆனால் ரயில்வே விதிப்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும்தான் மிடில் பெர்த்தை தூங்குவதற்காக விரித்து வைக்க வேண்டும். மற்ற நேரங்களில் அதை மடக்கி, கீழே உள்ளவர்கள் அமர வழி செய்ய வேண்டும்!
26
வெயிட்டிங் லிஸ்ட் கவலையே வேண்டாம்!
ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போது 'VIKALP' என்ற ஆப்ஷனை டிக் செய்ய மறக்காதீர்கள். உங்களது டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்றால், அதே வழித்தடத்தில் செல்லும் பிற மாற்று ரயில்களில் (அதிவேக ரயில்கள் உட்பட) காலியாக இருக்கும் சீட்டுகளை உங்களுக்கு தானாகவே ஒதுக்கும் சூப்பர் திட்டம் இது!
36
போர்டிங் பாயிண்ட் மாற்றம்
ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு (Chart தயாரிக்கும் முன்) வரை உங்களது போர்டிங் ஸ்டேஷனை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். இதனால் உங்களது சீட் கேன்சல் ஆகாது. அவசர நேரத்தில் ஆபத்பாந்தவனாக உதவும் டிப் இது!
ரயில்வே விதிகளின்படி, இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை டிடிஆர் (TTE) உங்களது டிக்கெட்டை பரிசோதிக்க உங்களை எழுப்பக் கூடாது. நீங்கள் இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறினால் மட்டுமே அவர்கள் செக் செய்யலாம். இடையில் தூங்குபவர்களை தொந்தரவு செய்ய அனுமதி இல்லை!
56
35 பைசாவில் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்
IRCTC-யில் டிக்கெட் புக் செய்யும் போது வெறும் 35 பைசா கட்டணத்தில் டிராவல் இன்சூரன்ஸ் ஆப்ஷன் இருக்கும். பலரும் இதை கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பயணத்தின் போது ஏதேனும் விபத்து நேர்ந்தால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற இந்த 35 பைசா இன்சூரன்ஸ் உதவும். எப்போதும் இதை ஆன் செய்து வையுங்கள்.
66
உங்க ஸ்டேஷன் வந்தா மொபைல் அலார்ட் வரும்!
நள்ளிரவில் உங்களது ஸ்டேஷன் வரும் போது தூங்கிவிடுவோம் என்ற பயம் இருக்கா? ரயில்வேயின் '139' ஹெல்ப்லைனுக்கு கால் செய்து 'Destination Alert' செட் செய்துவிட்டால், உங்கள் ஸ்டேஷன் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே உங்களுக்கு போன் கால் அல்லது எஸ்எம்எஸ் அலார்ட் வந்து உங்களை எழுப்பிவிடும்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.