குளிர்காலத்துல சின்ன வெங்காயத்தை பச்சையா சாப்பிடுங்க; இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!!

First Published | Dec 13, 2024, 9:53 AM IST

Small Onion Benefits In Winter : குளிர்காலத்தில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

small onion benefits in winter in tamil

வெங்காயம் சமையலறையில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஏனென்றால், இது இல்லை என்றால் எந்த ஒரு சமையலும் முழுமை அடையாது. மேலும் வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இன்று இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் தான் அதை பச்சையாக சாப்பிடுங்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள்.

Eating Small Onion Raw in Winter In Tamil

சின்ன வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

Tap to resize

Benefits of Eating Small Onion Raw in Winter In Tamil

குளிர்காலத்தில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

பொதுவாக குளிர் காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் அதிகமாகவே பரவும். இத்தகைய சூழ்நிலையில், சின்ன வெங்காயத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களை எதிர்த்து போராடவும் பெரிதும் உதவுகின்றது. எனவே, இதை பச்சையாக சாப்பிட்டு வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

உடலை சூடாக வைக்கும்:

சின்ன வெங்காயம் சூடான தன்மை கொண்டது என்பதால் குளிர்காலத்தில் பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் கதகதப்பாக இருக்கும். 

Raw onions for immunity in tamil

இதய ஆரோக்கிய மேம்படும்:

குளிர்காலத்தில் மாரடைப்பு வருவதை தடுக்க சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில், வெங்காயத்தில் உடலில் இருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது. எனவே குளிர்கால பருவத்தில் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் மேம்படும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும். 

இதையும் படிங்க:  வெங்காயம் வெட்டும் போது இந்த எளிய தந்திரத்தை ட்ரை பண்ணுங்க...இனி அழமாட்டீங்க..!!

Raw onion health benefits in tamil

இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்:

சின்ன வெங்காயத்தில் கிளைசெமிக் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். எனவே குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதை தினமும் சாப்பிட வேண்டும்.

சருமம் & தலைமுடி ஆரோக்கியம்:

குளிர்காலத்தில் தினமும் ஒன்று அல்லது இரண்டு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும். அதுமட்டுமின்றி, வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால், தலைமுடி உதிர்தலை தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

Latest Videos

click me!