Most Searched Food in google 2024
உலகம் முழுவதும் பிரதான தேடுபொறியாக கூகுள் உள்ளது. நம்மில் பெரும்பாலானோர் எல்லா தகவல்களுக்கும் கூகுளையே சார்ந்திருக்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 டிரில்லியன் தேடல்கள் கூகுளில் தேடப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள், படங்கள், உணவுகள் ஆகியவற்றை பட்டியலை கூகுள் வெளியிடுகிறது. அந்த வகையில் 2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
Most Searched food in Google
1. பார்ன் ஸ்டார் மார்டினி
பேஷன் ஃப்ரூட், வெண்ணிலா மற்றும் ஒயின் ஆகியவற்றின் சுவைகளை ஒருங்கிணைக்கும் பார்ன் ஸ்டார் மார்டினி, இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நவீன கிளாசிக் காக்டெய்லாக மாறியுள்ளது. இது தான் இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட உணவுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2. மாங்காய் ஊறுகாய்
இந்தியாவில் பிரபலமான ரெசிபியான மாங்காய் இந்த ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது., 2024 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்படும் உணவுகளில் 2-வது இடத்தில் மாங்காய் ஊறுகாய் உள்ளது.
3. தன்யா பஞ்சிரி
இந்து புராணங்களின்படி, தன்யா பஞ்சிரி என்பது கிருஷ்ணரின் விருப்பமான உணவாகும், மேலும் இது பாரம்பரியமாக கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யப்படுகிறது. இது இந்த பட்டியலில் 3-வது பட்டியலில் உள்ளது.
Most Searched food Panchamirtham
4. உகாதி பச்சடி
உகாதி பச்சடி என்பது தெலுங்கு புத்தாண்டுக்காக தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவாகும். வேப்பம் பூக்கள், மாங்காய் வெல்லம், மிளகு தூள், தேங்காய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது..
5. பஞ்சாமிர்தம்
பஞ்சாமிர்தம் என்பது பால், தயிர், துளசி இலைகள், தேன் மற்றும் கங்கா தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பானமாகும். இது குறிப்பாக குரு பூர்ணிமா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விஷேசங்களுக்கு செய்யப்படுகிறது. இந்த இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
6. எமா தட்சி
எமா தட்ஷி என்பது ஒரு காரமான பூட்டானிய உணவாகும் ஆகும். மிளகாய், வெங்காயம், பாலாடைக்கட்டி, தாவர எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது.ஒரு நேர்காணலில் தீபிகா படுகோன் இந்த உணவின் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதை அடுத்து இது இந்தியாவில் வைரலானது. இதனால் அதிகமானோர் இந்த உணவை தேடினர். எனவே இந்த பட்டியலில் இது 6-வது இடத்தில் உள்ளது.
Most Searched food kanji
7. ஃப்ளாட் ஒயிட்
ஃப்ளாட் ஒயிட் என்பது எஸ்பிரெசோ மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் காபி பானமாகும். மார்ச் 2024 இல், கூகுள் டூடுல் இந்த பானத்தைப் பாராட்டியது. இது அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
8. கஞ்சி
கஞ்சி என்பது தண்ணீர், கேரட், பீட்ரூட், கடுகு மற்றும் சாதத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய வட இந்திய பானமாகும். இது இந்த பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
Most Searched food
9. சங்கர்பாலி
மைதாவில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கட் ஆகும். குறிப்பாக தீபாவளி அல்லது ஹோலிக்காக இது தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
10. சம்மந்தி
சம்மந்திப் பொடி என்பது கேரளாவை சேர்ந்த ஒரு துவையல் ஆகும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் இல்லாமல் அரைத்து சமைக்கப்படுகிறது. சம்மந்தி இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் சம்மந்தி தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை எழுந்த நிலையில், இதனை அதிகமானோர் கூகுளில் தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.