
உடலின் ஆரோக்கியத்திற்கு நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணம். உணவு பழக்கம், உடற்பயிற்சி, சரியான தூக்கம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உதவி புரிகின்றன. வயது ஆக ஆக நம்முடைய ஆரோக்கியத்தை பராமரிக்க அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த பதிவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து காணலாம்.
1). டீ குடிப்பதில் கவனம்;
நீங்கள் தேநீர் அல்லது காபி அருந்தும் போது அதில் குறைவான அளவில் பால் சேர்க்க வேண்டும். சர்க்கரை அளவை குறைக்கலாம். தேநீரில் பால் சேர்க்காமல் எலுமிச்சை சாறு கலந்து லெமன் டீயாக அருந்தலாம். மாலை நேரத்தில் காபி அருந்தவே கூடாது. காலை அல்லது பகலில் இரண்டு முறைக்கு மேல் காபி எடுத்துக் கொள்வது உடலை பாதிக்கும்.
2). உடலை பராமரிக்க!
பகலில் அதிகமாக தண்ணீர் அருந்தலாம். ஆனால் மாலை 6 மணிக்கு பின் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வது நல்லது.
எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. உணவை சமைக்கும் போது எண்ணெய் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். சாயங்காலம் 5 அல்லது 6 மணிக்கு பிறகு பயிறு வகைகள் ஏதேனும் எடுத்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: காலையில் எழுந்ததும் இந்த '5' விஷயங்களை முதல்ல செய்ங்க! ஆரோக்கியமா இருப்பீங்க!!
3). தூக்கம்:
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையே நல்ல தூக்கம் தான். இரவில் 10 மணி முதல் காலை 6 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதிகபட்சமாக 8 மணி நேரம் முதல் குறைந்தபட்சமாக 7 மணி நேரம் வரை தூங்குவது அவசியம்.
4). குளிர்ந்த நீர்:
வயதாகும் போது குளிர்ந்த நீர் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். 45 வயதுக்கு பிறகு குளிர்ந்த நீர் குடிப்பது குறைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மிதமான சூடுள்ள நீர் அல்லது சாதாரண நீரை அருந்தலாம். எப்போதும் குளிர்ச்சியான தண்ணீரில் மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது. தூங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மாத்திரை மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மாத்திரை சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது.
இதையும் படிங்க: நீண்ட நாள் வாழ்றதுக்காக இப்படிலாமா செய்றாங்க? ஜப்பானியர்களின் '6' நல்ல பழக்கங்கள்!!
5). கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதித்து கொள்வது நல்லது.
உனவில் கவனம்:
குறைவாக சாப்பிட வேண்டியவை;
உங்களுடைய உணவில் உப்பு, சர்க்கரை ஆகியவற்றின் அளவை குறைத்துக் கொள்ளுதல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உணவுகளை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்துள்ள கிழங்கு வகைகள், உணவுகளை குறைக்க வேண்டும். பால் பொருள்கள் சாப்பிடுவது குறைத்துக் கொள்ளலாம்.
அதிகம் சேர்க்க வேண்டிய உணவுகள்:
கீரைகள், காய்கறிகள், பீன்ஸ், பழங்கள், பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6). மகிழ்ச்சியாக இருங்கள்:
உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பாடுவது, நடனம் ஆடுவது, சிரிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக பழக வேண்டும். அவ்வப்போது உண்ணாமல் விரதம் இருப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
7). எடை மேலாண்மை:
பசி, தாகம், தூக்கம், ஓய்வு போன்றவற்றை செய்ய தாமதிக்க வேண்டாம். பசிக்கும் வரை சாப்பிடாமல் இருப்பது, தூக்கம் வரும் வரை தூங்காமல் இருப்பது என அவற்றை தள்ளி போடாமல் குறிப்பிட்ட நேரத்தில் இந்த விஷயங்களை செய்து பழக வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் போகும் வரைக்கும் மருத்துவரை சந்திக்காமல் இருப்பதை தவிர்த்து, அவ்வப்போது உடலை மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது.
8). வெதுவெதுப்பான நீர்:
நீங்கள் சாப்பிட்டு முடித்த பின்பு குளிர்ந்த நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். சாப்பிட்ட பின்னர் கூல்ட்ரிங்ஸ், ஐஸ் வாட்டர் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வெந்நீர் குடிக்கலாம். தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்திவிட்டு படுப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.