
அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் உடல் வலிமையுடனும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்களது வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் தான். ஆனால் தற்போது நாம் எந்த ஒரு உடல் உழைப்பும் இல்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருப்பதால் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகிறோம். அதாவது, கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மொபைலுக்கு அதிக நேரம் செலவிடுவது என போன்ற பல உண்டு.
இத்தகைய சூழ்நிலையில் தினமும் காலை வெறும் 30 நிமிடம் நடப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தால் உடலை ஃபிட்டாக வைத்திருக்க முடியும். நடைப்பயிற்சி தான் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான உடற்பயிற்சியாகும். எனவே நீங்கள் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் 30 நிமிடம் நடந்து வந்தாலே போதும் நீங்கள் எதிர்பார்த்தாத அளவிற்கு பல நன்மைகள் கிடைக்கும். அது என்னென்ன நன்மைகள் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் வாக்கிங் போறீங்களா? 'இத' செஞ்சுட்டு நடந்தா மட்டும் தான் நன்மை!!
30 நிமிடம் நடந்தால் கிடைக்கும் நன்மைகள்:
1. இதய ஆரோக்கியம் : நீங்கள் தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்து வந்தால் உங்கள் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களது ஊழலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படும் மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
2. செரிமானம் மேம்படும் : தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்து வந்தால் செரிமான மேம்படும். இதனால் நீங்கள் சாப்பிடும் உணவு முழுமையாக செரிமானமாகும். இது தவிர அஜீரணக் கோளாறுகள் மற்றும் இதர பல பிரச்சனைகளையும் நடைபயிற்சி தடுக்கும்
3. நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுத்தப்படும் : தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுத்தப்படும். இதனால் உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.
4. மூளை ஆரோக்கிய மேம்படும் : 30 நிமிட நடைபயிற்சி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நடப்பதன் மூலம் மூளை திசுக்களின் அளவு மற்றும் நினைவு ஆற்றல் இழப்பு ஆகியவை தடுக்கப்படும்.
5. எடை குறையும் : நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். அதாவது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நடந்தால் அதற்கான நல்ல பலன்களை பெறுவீர்கள். எனவே நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் தினமும் 30 நிமிடங்கள் ஆவது கண்டிப்பாக நடங்கள்.
இதையும் படிங்க: இந்த '2' பிரச்சனை இருக்குறவங்க வீட்டில் செருப்பு போடாமல் நடக்காதீங்க.. பிரச்சினையாகிடும்!
6. ஆயுட்காலம் அதிகரிக்கும் : ஆய்வுகளின் படி தினமும் நடைபயிற்சி செய்பவர்களுக்கும், ஆரோக்கியமான உணவை பின்பற்றுபவர்களுக்கும் அவர்களது ஆயுட்காலம் 5-7 அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளன.
7. சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் : மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் தான் சர்க்கரை நோய் வருகிறது. எனவே சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி
செய்தால் டைப் டு நீரிழிவு நோயின் அபாயம் தடுக்கப்படும்.