
ஒவ்வொரு நாட்டிலும் திருமண முறைகள் மாறுபடுகின்றன. அதில் இந்தியாவை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏன் மாவட்டங்களுக்கும் இடையே உள்ள திருமண சடங்குகளே வித்தியாசப்படுகின்றன. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் மணமகனின் செருப்பை திருடும் பழக்கம் உள்ளது.
ஒரு சமூகத்தினர் இடையே மணமகனின் சகோதரிதான் மணமகளுக்கு தாலி கட்டுவார். இந்தியாவில் உள்ள சில இடங்களில் பின்பற்றப்படும் திருமண சடங்குகள் சட்டவிரோதமானதாக உள்ளன. உதாரணமாக கிர்கிஸ்தான், பீகாரில் திருமண நிகழ்வை முன்னிட்டு மணப்பெண்ணையே கடத்தும் வழக்கம் உள்ளது. நல்ல வாய்ப்பாக இவை இப்போது சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளன.
நம்முடைய கலாச்சாரங்கள் தான் திருமணத்தை கொண்டாட்ட நிகழ்வாக மாற்றுகிறது. ஏனென்றால் திருமணம் நடைபெறும் நாள் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நாளில் உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு கலாச்சாரங்கள் வெவ்வேறு விதமான சடங்குகளைப் பின்பற்றுகின்றன. அதில் வினோதமானதாக உள்ளவற்றை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: இது என்ன நூதனமா இருக்கு? இந்த ஊரில் புதுமண தம்பதிகள் சுடுகாட்டில் தான் முதல் பூஜை செய்வார்களாம்!
அவமானம் தான் டாஸ்க்:
ஸ்காட்லாந்த் நாட்டின் சில பகுதிகளில் திருமண நாளன்று பின்பற்றப்படும் மரபு வியப்பளிக்கக் கூடியது. மணமகன், மணமகள் இருவரின் நண்பர்களும் திருமணத்திற்கு முன்பாக மணமக்களை அவமானப்படுத்தும் விதமான காரியங்களை செய்கின்றனர். அதாவது மாவு, முட்டை போன்றவைகளை தம்பதிகள் மீது வீசுகிறார்கள்.
இப்படி செய்வது அவர்களுடைய கலாச்சாரத்தில் முக்கியமான செய்தியை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் திருமண பந்தம் கடினமான பொறுப்புகளௌ கொண்டது. அதனால் ஒரு தம்பதி இதைத் தாங்கிக் கொண்ட பின்னரும் இணைந்து இருக்க முடிந்தால், அவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்குமாம். இருவரும் இணைந்து திருமண வாழ்வில் வரும் கஷ்டங்களை இணைந்து சமாளிப்பார்கள் என நம்பப்படுகிறது.
மணமகனின் காலணி களவு:
இந்தியாவில் உள்ள இந்து திருமணங்கள் விசேஷமானவை. பல சடங்குகளை கொண்டிருக்கும். திருமண நாள் அன்று மணமகனின் காலணிகளைத் களவாடுவதும் ஒரு சடங்கு தான். ஆனால் வேடிக்கையானது. இந்த காலணி திருட்டை மணப்பெண்ணின் பெண் உறவினர்கள் தான் செய்வார்கள்.
யாருக்கும் தெரியாமல் அவர்கள் மணமகனின் காலணிகளை திருடுவது ஒரு சுவாரசிய நிகழ்வாகும். இதன் பின்னர் மணமகனிடம் அதற்கு விலை பேசி தான் திருப்பித் தருவார்கள். இதனால் மணமகனுக்கும் கொழுந்தியா உறவு முறையினருக்கும் இடையே ஒரு நட்புரீதியான பந்தம் உருவாகும்.
இதையும் படிங்க: இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சு போடப்படுகிறது ஏன் தெரியுமா?
மணப்பெண் கடத்தப்படுதல்:
கிர்கிஸ்தானில் வினோதமான பழக்கம் இருந்தது. முந்தைய காலத்தில் கிர்கிஸ்தான் ஆண்கள் அவர்களுக்கு பிடித்த பெண்ணைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்வார்களாம். இதில் பெண்ணின் சம்மதம் பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. பெண் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருமணம் நடக்கும்.
நல்லவேளையாக தற்போது இதனை அரசு சட்டவிரோதமாக்கியுள்ளது. இதை போலவே இந்தியாவில் உள்ள பீகாரின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. இதில் பெண்ணின் தரப்பினர் ஒரு ஆணை கட்டாயமாக கடத்திச் சென்று, தங்கள் மகளையோ சகோதரியையோ திருமணம் செய்து வைப்பார்கள். இந்த முறை குறித்து தனுஷ் நடித்த கலாட்டா கல்யாணம் படத்தில் காட்டப்பட்டிருக்கும்.
பாத்திரத்தை உடைத்தல்:
ஜெர்மனியில் உள்ள இந்த பாரம்பரியம் புதிய தம்பதிக்கு குழுப்பணியை சொல்லி கொடுக்கும். திருமணம் ஆனதும் விருந்தினர்கள் அனைவரும் புதுமண தம்பதியரின் வீட்டிற்குச் செல்வார்கள். அங்குள்ள பாத்திரங்கள், மட்பாண்டங்களை ஆவேசமாக போட்டு உடைப்பார்கள். இப்படி செய்தால் திருமணமான தம்பதிக்கு அதிர்ஷ்டம் வரும் என நம்புகிறார்கள். ஏனென்றால் விருந்தினர்கள் வீட்டுக்கு திரும்பிய பின்னர், புது தம்பதி தான் குப்பை மேடான வீட்டை சுத்தம் செய்வார்கள். இதனால் இருவரும் குழுவாக செயல்படுவார்கள். அதுவே இந்த பாரம்பரியத்தின் நோக்கம்.